யேகோவா - யீரே #3 Grass Valley, California, USA 62-0707 1நன்றி, சகோ. பார்டர்ஸ், நீங்கள் உட்காரலாம். கூட்டத்தின் தலைவரான சகோ. ஹாரல் என்பவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன், அவர் மிஷனரி என்று நான் அறிந்த போது, எங்களுக்கிடையே பொதுவான காரியங்கள் உண்டாயிருந்தன. அவர் இப்பொழுது ஆப்பிரிக்காவிலுள்ள கோல்டு கோஸ்ட் என்னுமிடத்திற்கு செல்லவிருக்கிறார். நானும் இந்த ஆண்டு அங்கு செல்ல வேண்டுமெனும் நோக்கமுடையவனாயிருக்கிறேன், எனவே தென்ஆப்பிரிக்காவிலிருந்து நான் கோல்டு கோஸ்டுக்கு விஜயம் செய்யும்போது, இருவருமே ஒன்றாக சிலவற்றை செய்ய முயன்று வருகிறோம். என் நாளில் நடந்த மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்று தென் ஆப்பிரிக்காவில் நடந்தது என்று நான் எண்ணுகிறேன். அப்பொழுது ஒரே நேரத்தில் முப்பதாயிரம் கம்பளி சுதேசிகள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். ஆமென். அவர்கள் உண்மையாகவே அப்படி செய்தனரா என்று அறிய, அவர்களுடைய விக்கிரகங்களை தரையில் போட்டு உடைக்கும்படி அவர்களிடம் கூறப்பட்டது. அவர்களும் அவைகளை உடைத்தனர். அதன் விளைவாக தூசு புயல் போன்ற ஒன்று மேலே எழும்பினது. அவர்கள் கிறிஸ்துவை அந்த ஒரே கூட்டத்தில் இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு நல்ல பின் தொடருதல் இருந்தது. எனவே அவர்கள் அவர்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் நிலைக்கும்படி செய்தனர். 2ஆனால் கர்த்தர் எங்களுக்களித்த மிகப்பெரிய பீட அழைப்பு இந்தியாவில் என்பதை என்னால் நினைவு கூரமுடிகிறது. அங்கு ஒரே கூட்டத்தில் ஏறக்குறைய ஐந்து லட்சம் பேர் குழுமியிருந்தனர். எங்களால் சரியாக கணக்கிட முடியவில்லை. கண்கள் காணக் கூடிய தொலைவில் அவர்கள் எல்லாவிடங்களிலும் இருந்தனர். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டனர், ஆனால் அதை பின் தொடர் அங்கு ஒன்றுமேயில்லை, எனவே சீக்கியர்கள் தங்களை சேர்ந்தவர்களையும், ஜைனர்கள் தங்களைச் சேர்ந்தவர்களையும் மீண்டும் எடுத்துக் கொண்டனர். கர்த்தர் அங்கு செய்த அற்புதங்களைக் கண்ட பிறகும், பெரும்பாலோர் தங்கள் தங்கள் மார்க்கத்துக்கு திரும்பிசென்று விட்டனர் என்று நினைக்கிறேன். கர்த்தர் எனக்கு கொடுத்துள்ள ஊழியம் அமெரிக்காவில் அவ்வளவு பலனளிக்கவில்லை - பெந்தெகொஸ்தே மக்களுக்கு மாத்திரமே. பெரும்பாலான அமெரிக்க சபைகள் மிகவும் அறிவு படைத்தவை. அவர்கள் ஒரு கோட்பாட்டை நம்புகின்றனர். அவர்கள் அங்கேயே நிலைத்திருக்கின்றனர். அவர்களை அதிலிருந்து உங்களால் அசைக்க முடியாது. ஆனால் ஒரு சுதேசியிடம் நீங்கள் ஒரு கோட்பாட்டைக் குறித்து கூறினால், அவன் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாதவன். அப்படியிருக்க அவனுக்கு சுவிசேஷ கைப்பிரதி ஒன்று கொடுப்பதனால் என்ன பயன்? அவன் ஏதாவதொன்றைக் காணவேண்டும். அவன் அதை காணும் போது, உறுதி கொள்கிறான். அவனுடைய மந்திரவாதி எழுந்து நின்று அதற்கு சவால் விடுகின்றான். ஆனால் பரிசுத்த ஆவி அவனை அங்கேயே மடங்கடிப்பதை அந்த சுதேசி காண்கிறான். ஆம், அப்பொழுது யார் தேவன் என்பது ருசுவாகிறது. அத்துடன் அது முடிவு பெற்றுவிடுகிறது. 3எனவே சகோ. ஹாரலை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! நான் ஆப்பிரிக்க சுதேசிகளைக் குறித்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சகோ. டி. எல். ஆஸ்பார்ன் குழுவிலுள்ள ஒருவரை தமது செலவில் அங்கு அனுப்பினதைக் குறித்து சொல்லிக் கொண்டிருந்தார். உங்களில் அநேகருக்கு சகோ. ஆஸ்பார்னை தெரியுமென்று நினைக்கிறேன். ஓ, அவர் விலையேறப்பெற்ற கிறிஸ்துவின் ஊழியக்காரன். அவர் என் ஆப்த நண்பர்களில் ஒருவர். என் இருதயத்தில் நிச்சயமாக சகோ. ஆஸ்பார்னைக் குறித்து ஆழ்ந்த மதிப்பு உள்ளது. அவர் மிகப் பெரிய மிஷனரி, இவ்வுலகில் மற்றெல்லாரைக் காட்டிலும் அவர் இன்று வெளிநாடுகளில் சுவிசேஷத்துக்காக அதிகம் பணியாற்றியுள்ளார் என்பது என் கருத்து. மிகவும் இனியவர், அருமையானவர், நான் நிச்சயம் சகோ. ஆஸ்பார்னையும் சகோதரி. ஆஸ்பார்னையும் நேசிக்கிறேன். 4இன்றிரவு ஆர்கன்பிரைட்டின் தாய் கூட்டத்துக்கு வந்துள்ளதாக அவர்கள் என்னிடம் கூறினர். தாய் ஆர்கன் பிரைட்டே, என்னிடத்திலிருந்து ஒளிந்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் மிகுதியான பெலனை நான் நிச்சயம் மெச்சுகிறேன். அவர்கள் அருமையானவர்களாயிருப்பதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் நாட்டின் இந்த பாகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எப்பொழுதுமே கிராஸ் பள்ளத்தாக்கை குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். கிராஸ் பள்ளத்தாக்கை சேர்ந்த திரு. மற்றும் திருமதி. ஆர்கன் பிரைட்டை எத்தனை பேருக்கு தெரியும்? அது நல்லது, தாய் ஆர்கன் பிரைட்டே, எங்கேயிருக்கிறீர்கள்? உங்களை நீண்ட நாட்கள் நான் காணவில்லை, நீங்கள் மெல்ல நழுவிவிட்டீர்கள்... அதோ இருக்கிறார்கள். ஆம், அவர்களுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக, அவர்களுடைய வீடு எனக்கு இரண்டாவது வீடு. மிகவும் அருமையானவர்கள், இந்த கிராஸ் பள்ளத்தாக்கை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இந்த மக்களின் பேரில் எப்பொழுதுமே பாரம் உள்ளது. சகோ. ஆர்கன்பிரைட், நீங்கள் இங்கு வந்திருப்பது முதல் இரவாயிருக்குமானால், நீங்கள் என் மனைவியையும் மற்றவர்களையும் இன்று சந்தித்த போது, நான் ஜெபம் செய்ய காட்டுக்கு சென்றிருந்தேன். உங்களையும் உங்கள் நண்பரையும் சந்திக்க இயலாமை குறித்து வருந்துகிறேன். 5ஆனால் இதை கூற விரும்புகிறேன், வேறெந்த அமெரிக்க பட்டினத்திலும் நடக்காத ஒன்று இங்குள்ள உங்கள் ஜனங்களின் மத்தியில் நடப்பதை நான் கண்டேன். கிறிஸ்தவர்கள் தாங்கள் தேவனுடைய வார்த்தைக்கு தவறாயுள்ளதை அறிந்து கொண்டு, எழுந்து நின்று இரக்கத்துக்காக மன்றாடுவதை நான் கண்டேன். ஆம், ஒரு எழுப்புதல் இங்கு உண்டாகக்கூடும் என்பது போல் எனக்குத் தோன்றுகிறது, அப்படி நிகழ்ந்தால், அது அருமையாயிருக்கும். நான் உலகம் முழுவதிலும், முக்கியமாக அமெரிக்காவிலும் பிரசங்கித்து வந்திருக்கிறேன். ஆனால் வார்த்தை அவர்களிடம் கொண்டுவரப்பட்டு அது என்னவென்று காண்பிக்கப்பட்டபோது, இங்குள்ள கிறிஸ்தவர்கள் கூட்டம் கூட்டமாக எழுந்து நின்று அவர்கள் தவறென்று அறிக்கையிட்டது போல், நான் முன்பு கண்டதில்லை. அது மாத்திரமல்ல, அவர்களுடன் சேர்ந்து போதகர்களும் கூட. அதுதான் உத்தமம் என்பது. அது எனக்குப் பிரியம். சகோதரி ஆர்கன் பிரைட், அவர்கள் உங்களை நிற்க வைத்து விட்டார்கள். 6என் மனைவியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தப் போகின்றேன். அவள் உலகிலேயே மிகுந்த பயங்காளி. அவள் இன்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். தேனே, இதற்கு நீ என்னுடன் சம்மதிப்பாய் என்று எண்ணுகிறேன். என் மனைவியை எழுந்து நிற்கும்படி கூறப் போகிறேன். உலகிலேயே அவள் எனக்கு மிகவும் இனிய பெண்மணி (சபையோர் கை கொட்டுகின்றனர் -ஆசி). என் மகள், என் மூத்த மகள் ரெபேக்காள். தேனே, உன் தோல் சூரிய வெப்பத்தினால் கறுத்துள்ளதை அறிகிறேன் (Sunburned) இருப்பினும் நீ எழுந்து நிற்க வேண்டுமென்று விரும்புகிறேன். சரி, ரெபேக்காள். அது என் மகள் ரெபேக்காள் (சபையோர் கைகொட்டுகின்றனர் - ஆசி). நன்றி. நன்றி. எத்தனை பேருக்கு சகோ. ஜூவல் ரோஸை தெரியும், ஒரு இரவு கூட்டம் தொடங்கின பிறகு, அவர் என் மனைவியை நான் இருந்த மேடைக்கு அழைத்தார். அவள் மயக்கமுற்று விழுந்து விடுவாள் போலிருந்தது, அவள் அவரை எங்கு கண்டாலும் பதுங்கி சென்று விடுவாள். அவர் இருக்கும் இடத்துக்கே வரமாட்டாள். அவர் எங்கே அவளை மறுபடியும் மேடைக்கு அழைப்பாரோ என்று அவளுக்கு பயம். நான் அவளிடம், “என்றாகிலும் ஒரு இரவு நீ எழுந்து நின்று எங்களுக்கு சில வார்த்தைகள் உரைக்கும்படி கூறப் போகிறேன்''. என்றேன். அவள், ''ஒரு வாளி தண்ணீர் ஆயத்தமாக வைத்திருங்கள். நான் மூர்ச்சையடைந்துவிடுவேன்'' என்றாள். என் மனைவி எனக்கு மிகவும் அருமையானவள், பிரன்ஹாம் குடும்பத்துக்கு ஏதாகிலும் நன்மதிப்பு கொடுக்கப்பட வேண்டுமானால், அது அவளுக்கே சேர வேண்டும். அவள் தான் எனக்கும் பொது ஜனத்துக்கும் இடையே இருந்தவள். நன்மையாக செய்யப்பட்ட அனைத்தும் அவளே செய்ததாக கருதப்பட வேண்டும். 7இங்குள்ள ஒவ்வொரு இளைஞனும் மணம் புரியும் போது, நானும் என் மனைவியும் ஒருமித்து கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக மகிழ்ச்சியான மணவாழ்க்கையை நடத்தி வருவது போன்று, அவனுக்கும் ஒரு நல்ல மனைவி கிடைத்து இருவரும் சந்தோஷமாயிருப்பார்களென்று நம்புகிறேன். “மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்'' என்று சாலொமோன் கூறியுள்ளான் (நீதி. 18:22). ''குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்கு கிரீடமாயிருக்கிறாள். அநீதியுள்ளவளோ அவனுடைய இரத்தத்தில் தண்ணீராக இருக்கிறாள்.” அவனுடைய இரத்த ஓட்டமே அவனுடைய ஜீவன். எனவே அநீதியுள்ளவள் அவன் பெற்றுக் கொள்ளக் கூடிய மோசமான ஒன்று. ஆனால் நீதியுள்ளவளே, இரட்சிப்புக்கு அடுத்தபடியாக அவன் பெறக்கூடிய மிகவும் நன்மையான ஒன்று. தேவன் மனிதனுக்கு மனைவியை விட நன்மையான ஒன்றைக் கொடுக்க முடிந்திருந்தால் கொடுத்திருப்பார். ஏனெனில் தேவன் தமது பிள்ளைகளுக்கு நன்மையானவைகளையே அருளுகிறார். அவர் அவனுக்கு மனைவியைத் தந்திருக்கிறார். அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். பெண்களை இப்படி காணும் போது... அன்றிரவு அவர்களைக் கடிந்து கொள்ள நேர்ந்தது. இந்த பெந்தெகொஸ்தே பெண்கள் உடுத்தும் விதத்தைக் குறித்தும், தலைமயிர் அலங்காரம் செய்து கொள்வதைக் குறித்தும் ஒரு வசனம்உண்டு. நீங்களோ, ''அதனால் ஒரு வித்தியாசமுமில்லை'' என்கிறீர்கள். நிச்சயமாக உண்டு!. 8உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இங்கு சகோ. ஹாரல், மிஷனரி இருக்கிறார். தென்ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனில் பெண்கள், அவர்கள் உலகிற்கு வந்த வண்ணமாக, நிர்வாணிகளாக அமர்ந்திருந்திருந்தனர். தைக்கப்பட்ட ஒரு ஆடையும் கிடையாது - நான்கு அல்லது ஆறு அங்குலமுள்ள துணி மாத்திரமே அவர்களுக்கு முன்னால் இருந்தது. நிர்வாணமான அந்த நிலையில் அவர்கள் அங்கிருந்தனர். இந்த மகத்தான அற்புதங்கள் மேடையின் மேல் நிகழ்ந்த பிறகு அவர்கள் எழுந்து நின்றனர். அந்த கூட்டத்தில் ஒரே நேரத்தில் பத்தாயிரம் முகம்மதியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர், இந்த பெண்களும் ஆண்களுடன் எழுந்து நின்று கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். சகோ. பாஸ்வர்த் என்னிடம், “சகோ, பிரன்ஹாம், நீங்கள் மறுபடியும் அந்த அழைப்பைக் கொடுக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். சரீர சுகம் பெற்றதன் அடையாளமாக அவர்கள் எழுந்து நிற்கின்றனர் போலும்'' என்றார். 9நான் பதினைந்து வெவ்வேறு மொழி பெயர்ப்பாளர்களைக் கொண்டவனாய் இதை கூறினேன். அது எவ்வளவு நேரம் எடுக்குமென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் சொன்னது என்னவென்று குறித்து வைத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் மொழி பெயர்த்து முடிக்கும்போது.... நீங்கள், ''பாவிகளை இரட்சிக்க தேவனுடைய குமாரன் இயேசு கிறிஸ்து வந்தார்“ என்று கூறினால், ஒரு மொழி பெயர்ப்பாளர், ”ப்ளு, ப்ளு, ப்ளூ, ப்ளூ'' என்பார். மற்றொருவர் ''நிக், நிக், நிக், நிக், என்பார் அதற்கு ''தேவகுமாரன் இயேசு கிறிஸ்து'' என்று அவரவர் மொழிகளில் அர்த்தம். ஜனங்கள் அந்நிய பாஷைகளில் பேசினதை நான் கேட்டதுண்டு. அப்பொழுதெல்லாம், ''அது சரியாயிருக்க முடியாது'' என்று நினைத்ததுண்டு. ஆனால் வேதமோ, “அர்த்தமில்லாமல் ஒரு சத்தமும் கிடையாது'' என்கிறது. அப்படி ஒரு சத்தமும் இல்லை. அவர்களில் சிலர் குருவிகளைப் போல் 'க்ளக்' என்றும் சிலர் பூச்சிகளைப் போல் 'ட்வீட்' என்றும் சத்தமிடுவதை நான் கேட்டேன். ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தமுண்டு - ஒவ்வொரு சத்தத்துக்கும் அர்த்தம் இருக்குமானால். 10மறுபடியுமாக நான் பேசி, மற்றவர்கள் மொழி பெயர்க்க வேண்டிய தருணம் வந்து போது, நான், ''அது சரீர சுகம் அல்ல, நீங்கள் தேவனுடைய குமாரனை விசுவாசித்து, கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, செல்வதற்கு பரலோகம் ஒன்றுண்டு என்று விசுவாசிப்போர் உங்கள் விக்கிரகங்களை தரையில் போட்டு உடையுங்கள்'' என்று கூறினேன். அவர்கள் கீழே போட்டு உடைத்தனர். நான், ''நீங்கள் இருக்கும் இடத்திலேயே அந்த தேவனிடம் உங்கள் கைகளையுயர்த்தி அவருக்கு துதியை செலுத்துங்கள், அவர் உங்களுக்கு பரிசுத்த ஆவியைத் தந்தருளுவார்“ என்றேன். அவர்கள் தரையில் நின்று கொண்டிருந்தபோது, பெண்கள் நிர்வாணமாய் இருப்பதைக் கண்டேன். கிறிஸ்து அவர்களைத் தொட்ட மாத்திரத்தில், அவர்கள் கைகளை மடக்கி மூடிக்கொண்டு அங்கிருந்து நடந்து சென்றுவிட்டனர். அடுத்த முறை அவர்களைக் கண்டபோது, அவர்கள் உடை உடுத்தியிருந்தனர். கிறிஸ்து ஒரு அஞ்ஞானிக்கு, அவள் நிர்வாணமாயுள்ளது தவறென்று உணர்த்த முடியுமானால், தங்களைக் கிறிஸ்தவர்களென்று அழைத்துக் கொள்ளும் ஸ்திரீகள் ஆண்டுதோறும் அதிகமாக உடைகளைக் களைவதென்பது எனக்கு விளங்கவேயில்லை. எங்கோ ஏதோ தவறுள்ளது. அங்கு முழுக்க முழுக்க ஒரு அஞ்ஞானி, தான் பிறந்த ரூபத்தில் நின்றுகொண்டு, அவள் நிர்வாணமாயிருப்பதை அறியாமலே இருக்கிறாள். ஆனால் கிறிஸ்து அவளுக்கு முன்னால் வரட்டும். அவள் நிர்வாணியாயிருப்பதை உணர்ந்து, அவளால் கூடுமான வரையில் தன்னை தன் முடக்கின கரங்களால் மூடிக்கொள்ள முயன்று, அவ்விடம் விட்டு நடந்து சென்று விடுகிறாள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அவளைக் காணும்போது, அவள் உடுத்திக் கொண்டிருக்கிறாள். எங்கோ ஏதோ தவறுள்ளது, அந்த தவறு கிறிஸ்துவினிடமல்ல என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஓ, வார்த்தை பிழையற்றது என்று நான் எண்ணுகிறேன். 11எனக்கு ஆபிரகாமின் பயணம் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் அல்லவா? அதில் நீண்ட நேரம் நான் நிலைத்திருக்கிறேன். இன்றிரவு யேகோவா - யீரே என்னும் பொருளுக்கு வருவேன் என்று எதிர்பார்க்கிறேன். இந்த பொருளை நான் மூன்று அல்லது நான்கு இரவுகளுக்கு முன்பே எடுத்தேன். ஆனால் இன்று வரை அதற்கு வர முடியவில்லை. என் கூடாரத்தில் யோபுவைக் குறித்து பிரசங்கித்த போது, அந்த ஒரே பொருளில் ஒரு ஆண்டு காலம் நிலைத்திருந்தேன். ஏறக்குறைய ஒரு ஆண்டு காலமாக ஒவ்வொரு ஞாயிறன்றும் புதனன்றும் நான் யோபின் புத்தகத்தில் நிலைத்திருந்தேன். அவனை சாம்பல் குவியலின் மேல் மூன்று நான்கு வாரங்கள் உட்காரவைத்தேன். ஒரு விலையேறப்பெற்ற சகோதரி, “சகோ, பிரன்ஹாமே, நீங்கள் எப்பொழுது யோபுவை சாம்பல் குவியலிலிருந்து தூக்கிவிடப் போகின்றீர்கள்?'' என்று எனக்கு எழுத போதிய தைரியம் பெற்றிருத்தாள். நீங்களும், நான் எப்பொழுது யேகோவா - யீரேவைக் காண்பதற்கு ஆபிரகாமைக் கொண்டு செல்லப் போகின்றேன் என்று வியக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். 12ஆனால் எனக்கு ஒரு முக்கியமான விஷயம் இருந்தது. ஆபிரகாம் - இல்லை, யோபு அங்கு சாம்பல் குவியலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். எலிகூ பேசுகிறான். தேவன் அவருடைய பரிசுத்தவானை சோதித்து, அவனுக்கிருந்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டார் (நான் இந்த இடம் வரைக்கும் வந்து), பிறகு கொல்லும் அம்பை எய்வதற்கு எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தினேன். அப்பொழுது கர்த்தர் சுழல் காற்றில் இறங்கி வந்தார். மின்னல்கள் மின்னத் தொடங்கின, இடிகள் முழங்கின. தேவனுடைய ஆவி தீர்க்கதரிசியின் மேல் இறங்கினது, அவன் காலூன்றி எழுந்து நின்று, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன்” என்றான். (யோபு 19:25) “மீட்பர் என்பதை கவனியுங்கள், ''அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் அறிந்திருக்கிறேன். இந்த தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்தாலும் பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்'' ஓ, அதில் எத்தகைய பாடம் உள்ளது. அதை ஆணித்தரமாக பதிக்க வேண்டுமென்றால், சிறிது நேரம் அவசியமாயுள்ளது, ஜனங்களை அந்த சூழ்நிலைக்கு கொண்டு வந்து, ஆவியானவர் சரியான விதத்தில் இருக்கும் போது, அதை பதியச் செய்ய வேண்டும். அப்படி செய்த பிறகு, பீடம் வரிசையிலுள்ள ஜனங்களால் நிறைந்து, அவர்கள் மனந்திரும்பினர். 13நீங்கள் ஆவியானவரால் நடத்தப்பட்டால், குறி இலக்கை நோக்கி சரியாக அமையும் வரைக்கும் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி செய்யாமல் போனால், நீங்கள் அதிக உயரமாகவோ அல்லது அதிக அகலமாகவோ சுட்டு விடுவீர்கள், நாம் வேதாகமத்தை நோக்கி குறியை சரியாக வைப்போம். நாம் சரியாக குறிவைக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுடன் சரியாக குறிவைத்தார்; அல்லது, அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியை சரியாக குறிவைத்தனர் என்பதே. நாமும் அதே வார்த்தையைக் கொண்டு அதையே செய்ய முடியுமென்று நான் நம்புகிறேன். அது இலக்கை தவறாமல் சுடும். அது ஒரு முறை இலக்கின் நடுமையத்தில் சுட்டால், அது மறுபடியும் அங்கேயே சுடும். ஆனால் நீங்கள் சரியாக குறிவைக்க வேண்டும். நீங்கள் சுடும்போது உங்கள் மூச்சு விடுதல், இழுத்தல் எல்லாம் சரியாயுள்ளதா என்று உறுதி கொள்ளுங்கள். நானும் இலக்குகளை சுடுகிறவன். போட்டியில் சரியாக குறிவைக்கக் கூடிய துப்பாக்கியின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். 14ஒரு முறை ஒரு சிறு 75 மாடல் துப்பாக்கியை நான் வின்செஸ்டர் கம்பெனிக்கு அனுப்பினேன். என்னால் அந்த துப்பாக்கியைக் கொண்டு ஐம்பது கெஜம் தூரத்தில் கால் அங்குலம் அகலமுள்ள இலக்கை சுட முடியவில்லை. அவர்கள் துப்பாக்கியை என்னிடம் திருப்பி அனுப்பி, ''சங்கை பிரன்ஹாமே, இந்த துப்பாக்கி இருபத்தைந்து கெஜம் தூரத்தில் அரை அங்குலம் அகலமுள்ள இலக்கை மாத்திரமே சுடும் என்று சொல்லிவிட்டார்கள். அந்த கம்பெனி தான் அந்த துப்பாக்கியை செய்தார்கள். நான் வேறுவிதமாக நினைத்துக் கொண்டிருந்தேன். நான் ஐம்பது கெஜ தூரத்தில் நேர்க் கோட்டில் முளைகளை அடிந்திருத்தேன். அது இலக்கை நோக்கி சரியாக குறி வைக்கப்பட்டிருந்தது. நான் அந்த துப்பாக்கியைக் கொண்டு ஒவ்வொரு முறையும் இலக்கை சுட முயன்று கொண்டிருந்தேன். ஆனால் குறி தவறிக் கொண்டேயிருந்தது. தேவனுடைய வார்த்தையும் அவ்வாறேயுள்ளது. அப்போஸ்தலர் செய்தவை, கிறிஸ்து வாக்களித்தவை இவைகளை வார்த்தையுடன் ஆவியுடன் நேர்க்கோட்டில் வைத்து சுடவேண்டும். அது ஒரு முறை இலக்கை குறி தவறாமல் சுட்டால், அது மறுபடியும் அப்படி செய்ய வேண்டும். ஏனெனில் அது தேவன். தேவன் வார்த்தையாயிருக்கிறார். அவர் தவறவே முடியாது. 15துப்பாக்கி இந்த விதமாக முன்னங் கையில் அதிகமாக தளர்ந்தோ அல்லது அதிக இறுக்கமாகவோ இருந்தால், உங்கள் விரலின் கனத்தை துப்பாக்கியின் மேல் போட்டு எவ்வளவு பிழையின்றி சுட்டாலும், உங்கள் விரலின் கனம் அதைக் குறி தவறச் செய்துவிடும். எனவே எல்லாமே பிழையின்றி இருக்க வேண்டும். நீங்கள் கிறிஸ்தவ மார்க்கத்திலும், வார்த்தை தன்னை வெளிப்படுத்தி சரியானபடி கிரியை செய்ய, அப்படித்தான் உங்களை வார்த்தையுடனும் தேவனுடனும் நேர்க்கோட்டில் சமப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது அது பிழையின்றி குறி தவறாமல் இருக்கும். அது அப்படித்தான் இருக்க வேண்டும்! எனவே பிரசங்கிக்கும் போது சரியான விதத்தில் ஆவியை உணர்ந்து, பிறகு குறி வைக்கவேண்டும். அப்பொழுது அது நேராக இலக்கை நோக்கி சென்று அதை சுடும். 16அநேக முறை ஜனங்கள், “சகோ, பிரன்ஹாமே, உங்கள் கூட்டங்களைக் குறித்து கேள்விப்படுவதில்லையே'' என்கின்றனர். மற்ற சகோதரர்களுக்கு உள்ளது போல் எனக்கு விளம்பரத்துக்கு வழிகளேயில்லை. அவர்களுக்கு பத்திரிக்கைகள், வானொலி, தொலைகாட்சி போன்றவை உள்ளன. நான் இப்படியே சென்றுகொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாய் இருக்க முயன்று வருகிறேன், ஜனங்கள் அதை காண்கின்றனர், அதை விசுவாசிக்கின்றனர். அவர்கள் சுகமடைகின்றனர், தேவன் அதை அறிந்திருக்கிறார், அது மாத்திரமே அவசியம். பாருங்கள்? நாங்கள் அப்படி இல்லை. வேறு சரித்திரம் எதுவும் எழுதப்படப் போவதில்லை. அதைக் குறித்து கவலை கொள்ளாதீர்கள், சரித்திரம் எழுத நேரம் எதுவும் இருக்காது. இயேசு வருகிறாரென்று நான் விசுவாசிக்கிறேன். அவர் இன்று அல்லது நாளை வருவார் என்பது போல இன்று நான் வாழ விரும்புகிறேன். பெரிய பள்ளிக் கூடங்கள் போன்றவைகளை அமைக்கப் போவதில்லை. அவைகளையெல்லாம் நாம் செய்து விட்டு, இயேசு வருகிறார் என்று பிரசங்கிப்பதனால் என்ன பயன்? நம்முடைய கிரியைகளே நமக்கு விரோதமாக சாட்சியிடும். அது உண்மை. இயேசு வருகிறார், அதற்காக நாம் சபையை ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்போம். நாம் ஆயத்தப்படுவோம், ஓ. அவரை நான் எவ்வளவாக நேசிக்கிறேன்! 17இப்பொழுது நாம் ஜெபத்துக்காக தலை வணங்குவோம். ஓ , மக்கள் பயபக்தியாய் தலைவணங்குவதைக் காண எனக்கு எவ்வளவு பிரியம்! நாம் சிறிது நேரம் அமைதியாயிருந்து படிப்போம். நாம் நமது நேரத்தை எடுத்துக் கொள்வோம். நாளை ஞாயிற்றுக் கிழமை, ஓய்வு நாள், கிறிஸ்தவ ஓய்வு நாள் . நாளை ஞாயிறு பள்ளிக்கு தாமதமாக வரவிரும்பவில்லை. அதே சமயத்தில் இவைகளை துரிதமாக நோக்கவும் நாம் விரும்பவில்லை. இப்பொழுது “இன்றிரவு என் இருதயத்திலுள்ள வாஞ்சை உமது சித்தத்தின்படி உள்ளதா?'' என்று ஆலோசியுங்கள். அப்படி இருக்குமானால், அதைக் குறித்து சிந்தித்து பாருங்கள். உங்கள் வாஞ்சையைக் குறித்து நீங்கள் சிந்தனை செய்து அதை தேவனுடைய திட்டத்துடன் ஒப்பிட்டு பாருங்கள் அது தேவனுடைய திட்டத்தில் சரிவர அமைந்திருந்தால், உங்கள் கரங்களை தேவனிடம் உயர்த்தி, ”தேவனே, என்னை நினைவு கூறும். இதுதான் என்னுடைய தேவை'' என்று கூறுங்கள். ஆழ்ந்து சிந்தியுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நல்லது. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. உங்கள் கரத்தை உயர்த்திக் கொண்டேயிருங்கள், அவர் எல்லாவற்றையும் காண்கிறார், அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அது நல்லது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, ஆமென். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. சிந்தனை செய்து, உங்கள் கரங்களையுயர்த்துங்கள். ஒவ்வொரு கரமும் மேலே உயர்த்தப்படும்போது நான் கவனித்து வருகிறேன். சரி. அது அருமையானது. 18பரலோகப் பிதாவே, நாங்கள் மறுபடியும் எல்லாவற்றிற்கும் போதுமான அந்த கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கிருபாசனத்தை அணுகுகிறோம். அந்த கவிஞன் கூறினது போன்று, ''கிருபாசனத்தண்டையில் எனக்கு இனிமையான விடுதலை கிடைப்பதாக'' தேவனே, அவர்களுடைய இருதயங்கள் ஏதோ ஒன்றுக்காக பாரமடைந்துள்ளது. இப்பொழுது கிருபாசனத்தண்டையில் மகத்தான வைத்தியனாகிய தேவன் அவர்களுக்குத் தரவிருக்கும் விடுதலையையும், அவர்களுக்கு என்ன தேவையோ, அதற்கான விசுவாசத்தையும் பெற்றுக் கொள்வார்களாக. தேவனே, என்னுடைய இரு கரங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. எனக்கும் தேவைகள் உள்ளன. கர்த்தாவே, என்னை நினைவு கூரும். இந்த உறுமால்கள் அடையாளமாயுள்ள எல்லோரையும் நினைவு கூரும். ஓ, இவைகளின் காரணமாக எத்தனை சாட்சிகள் வந்துள்ளன. பயபக்தி... இந்த மண் குன்றுகளுக்கு அப்பால் எங்கோ வியாதிப்பட்டுள்ள தாய்மார்களும், தகப்பன்மார்களும், சிறு குழந்தைகளும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களும், கண் பார்வையற்ற வயோதிப தந்தை கையில் வெள்ளை தடியைப் பிடித்துக் கொண்டு ஒரு சிறு அறையில் உட்கார்ந்து கொண்டு, இந்த உறுமால்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தேவனே, இரக்கமாயிரும். இந்த உறுமால்கள் அவர்கள் மேல் வைக்கப்படும் போது, சத்துரு தன் வல்லமையும் பெலத்தையும் இழந்து போகவும், இவர்கள் சுகமடையவும் அருள் புரிவீராக. இங்கு ஒன்றில் ''புற்றுநோய்“ என்று எழுதப்பட்டுள்ளது பிசாசு இந்த சரீரங்களைவிட்டு ஓடட்டும், பரிசுத்த ஆவிதாமே தேவன், இந்த நோக்கத்துக்காக மரித்த தமது சொந்த குமாரனின் இரத்தத்தின் வழியாக கீழே நோக்கும்போது, அந்த மகத்தான பலி இன்றிரவு போதுமானதாயிருந்து, விசுவாசம் அவர்கள் மேல் அபரிமிதமாக பொழிந்து, அவர்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்வார்களாக. கர்த்தாவே இதை அருளும். 19இப்பொழுது உமது வார்த்தையை ஆசீர்வதியும். உமது ஊழியக்காரனுக்கு உதவி செய்யும். ஆராதனைக்காக எங்களை அபிஷேகியும். கேட்கும் ஒவ்வொரு இருதயத்தையும் அபிஷேகியும். பிதாவே, இப்பொழுது நாங்கள் பேசப் போகின்றோம். நாங்கள் என்ன பேச வேண்டுமென்றும், என்ன செய்ய வேண்டுமென்றும், எங்களிடம் கூறுவீராக. கூட்டத்தில் நீர் எங்களோடு கூட இருப்பீரென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இன்றிரவு பாடப்பட்ட அந்த அருமையான பாடல்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த வாலிபன், சகோ. ஹெய்மர், கலிலேயன் என்னும் அருமையான பாடலை இப்பொழுது பாடினார். அந்த கலிலேய அந்நியர் தாமே இன்றிரவு உள்ளே நடந்து வருவாராக. அலை பாய்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இருதயத்துக்கும், அவர் அலைபாய்ந்து கொண்டிருந்த கடலை நோக்கி, ''அமைதியாயிரு“ என்று கூறினது போன்றது கூறும் அவருடைய சத்தத்தை நாங்கள் கேட்கட்டும். கலக்கமுள்ள ஒவ்வொரு இருதயமும் சுகம் பெறுவதாக; இயேசுவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென். 20ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவா- யீரே என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. ஆதி.22:14 இப்பொழுது இந்த மகத்தான மனிதனைக் குறித்து பேச விரும்புகிறோம். நாளை... கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு ஆபிரகாமைக் குறித்துப் பேசி முடித்துவிடுவோம். நாளை தெய்வீக சுகமளித்தலைக் குறித்த ஒரு பொருளின் பேரில் பேசலாம். கர்த்தர் இங்கு நமக்கு நல்லவராக இருந்து வந்துள்ளார். நாம் இங்கு நடந்தவைகளைக் குறித்து கூறப்பட்ட சாட்சிகளை கேட்டோம். மிக்க மகிழ்ச்சி! ஒரு இரவு, நாங்கள் ஒரு நீளமான ஜெப வரிசையை அழைத்தோம். அன்று இந்த கட்டிடத்தில் பெலவீனமுள்ள ஒருவரும் இருக்கவில்லை. சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்களும் கூட எழுந்து நடக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு இரவும் பரிசுத்த ஆவியானவர் தமது கம்பீரமான பிரசன்னத்துடன் உள்ளே வந்து கூட்டத்தினரின் வழியாக கடந்து சென்று, அவர் இங்குள்ளதை வெளிப்படுத்திக் காண்பித்தார். அப்படியானால், அவரை நாம் விசுவாசிக்க கடமைப்பட்டிருக்கிறோம். பாருங்கள், நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நீங்கள் தேவனுக்கு செலுத்தக் கூடிய மிகவும் உயர்ந்த கனம், அவரை விசுவாசிப்பதேயாம். நீங்கள் விசுவாசிக்கவேண்டும். “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்று விசுவாசிக்க வேண்டும்.'' (எபி. 11:6) இப்பொழுது அவரை விசுவாசியுங்கள். 21நான் ஆபிரகாமுடன் உங்களை பயணத்தில் கொண்டு செல்லும் காரணம், விசுவாசத்தை உச்சக் கட்டத்துக்கு வளரச் செய்து, ஜனங்கள் தாங்கள் யாரென்று கண்டறியவே. அது தான் தொல்லை. நாம் பிரயாணப்பட்டு செல்லும் போது, இரு சாராரை காண்கிறேன். ஒருவர் பெந்தெகொஸ்தேயினர், மற்றவர் அடிப்படை கொள்கையினர். அடிப்படை கொள்கையினர் அவர்கள் ஸ்தானத்தில் எங்குள்ளனர் என்றும், என்னவாயுள்ளனர் என்றும் அறிந்துள்ளனர். ஆனால் அதனுடன் அவர்கள் விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை. பெந்தெகொஸ்தேயினருக்கு விசுவாசம் உண்டு. ஆனால் அவர்கள் யாரென்று அறியாமலிருக்கின்றனர். இது வங்கியில் பணம் வைத்து, காசோலையை எப்படி எழுதுவதென்று அறிந்திராத ஒரு மனிதனைப் போன்றது. மற்றவனுக்கு காசோலை எப்படி எழுதுவதென்று தெரியும், ஆனால் வங்கியில் பணமில்லை. இவ்விருவரையும் நீங்கள் ஒன்றாக இணைத்தால், ஏதாவதொன்று நிகழும். நீங்கள் பெந்தெகொஸ்தேயினரின் விசுவாசத்தையும், அடிப்படை கொள்கையினரின் உபதேசத்தையும் ஒன்றாக பெற்றிருந்தால்... ஏதோவொன்று கண்டிப்பாக நிகழும், அது உண்மை. 22இங்கு ஒரு சாட்சியைக் கூற விரும்புகிறேன். ஒரு லூத்தரன் வேதாகமப் பள்ளியில், அவர்களிடம் பரிசுத்த ஆவியைக் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, நானூறு பேர் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறுவதைக் கண்டேன். ஓ, என்னே அது ஒரு மகத்தான காட்சி. அவர்கள் லூத்தரன்கள் என்னும் காரணத்தால் கைவிடப்படவில்லை என்று அவர்கள் அறியும்படி செய்வது. லூத்தரன்கள், பாப்டிஸ்டுகள், மெதோடிஸ்டுகள், கத்தோலிக்கர்கள் நீங்கள் யாராயிருந்தாலும், இவர்களுக்கு விரோதமாக ஒன்றும் கிடையாது. இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. இந்த மக்களுக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் அந்த முறைமைகளுக்கு விரோதமாகவே நான் பேசுகிறேன். தனிப்பட்ட நபருக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. அந்த மானிடர் அனைவருக்காகவும் கிறிஸ்து மரித்தார் - அது கத்தோலிக்கர், யூதர், யாராயிருந்தாலும் சரி. அந்த முறைமைதான். முகம்மதியர்கள், சீக்கியர், ஜைனர்கள் யாராயிருந்தாலும், அது அந்த முறைமையே. புத்த மதம் ஒரு முறைமை - புத்தரை வழிபடும் ஜனங்கள் அல்ல. அந்த முறைமையே அவர்களை சத்தியத்தினின்று விலக்குகின்றது. அதே விதமாகத்தான் இயேசு ஜனங்களுக்கு விரோதமாயில்லை, அவர் அவர்களுக்காக மரித்தார், அந்த முறைமைகள் தான் அவரை விலக்கி வைத்தன. அந்த முறைமைகளே அவர்கள் அவரிடம் வராதபடி விலக்கி வைத்திருந்தன. அதுதான் இப்பொழுதும் நடந்து வருகிறது. 23ஆபிரகாமுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தவனாய், ஆபிரகாமைக் குறித்து பேசலாமென்று எண்ணினேன். நாம் இந்த பயணத்தில் சற்று பின் சென்று, ஒரு பின்புறக் காட்சியை (background) பெற்று, இன்றிரவு நேரடியாக பொருளுக்குச் சென்று சிறிது நேரம் அதைக் குறித்து பேசுவோம். ஜெபம் செய்யப்பட விரும்பும் எவருக்கும் ஜெப அட்டைகள் விநியோகிக்கப்படும். நீங்கள் அனைவருமே இன்றிரவு ஜெப அட்டை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், நாளை இரவு அவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஜெபம் செய்யப்பட விரும்புகிறவர் எவருமே ஜெப அட்டை பெற்றிருத்தல் அவசியம், உங்கள் ஜெப அட்டையை பெற்றுக் கொள்ள நாளை ஒன்றரை மணிக்கே வந்து விடுங்கள். ஏனெனில் நாங்கள் கூட்டத்தை துவங்க விரும்புகிறோம். பிறகு ஜெப அட்டை வைத்துள்ள ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் நாளை ஜெபம் செய்வோம். கடந்த இரவுகளில், ஜெப அட்டைகளை வைத்திராதவர்களை நாங்கள் அணுக முயன்று வந்துள்ளோம். ஜெப அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு ஜெப வரிசையில் வரும் சிலாக்கியம் உண்டாயிருக்கும். ஜெப அட்டைகள் இல்லாதவர்கள் கூட்டத்திலிருந்து அழைக்கப்படுகின்றனர். எனவே இரு சாராரும் கவனித்துக் கொள்ளப்படுகின்றனர். ஜெப அட்டையினால் ஒன்றுமில்லை. ஒரு நபருக்கு ஜெப அட்டையைக் கொடுக்கும் போது, நாற்பது சதவிகிதம் பேர் அப்பொழுதே சுகமடைந்து விடுகின்றனர். நீங்கள் ஏதாவதொன்றைக் காணவோ, அல்லது ஏதாவதொன்றை பற்றிக் கொள்ளவோ ஜெப வரிசையில் வர எண்ணுகிறீர்கள். பையன். நாளை ஒன்றரை மணிக்கு ஜெப அட்டைகளை விநியோகிப்பான். மற்ற காரியங்களை கவனிக்க அவர்கள் இரண்டு மணிக்கு சென்று விட அது ஏதுவாயிருக்கும். 24உங்களுக்கு படங்கள், புத்தகங்கள், ஒலி நாடாக்கள் தேவைபட்டால், அவைகளை இன்றிரவே வாங்கிக் கொள்ள வேண்டும். ஞாயிறன்று விற்பனை கிடையாது. அன்று விற்பனை செய்ய நாங்கள் அனுமதிப்பதில்லை, நாங்கள் ஞாயிற்றுக் கிழமைக்கு மதிப்பு கொடுப்பதனால், ஞாயிறு அன்று விற்பனை செய்வதில்லை. அந்த புத்தகங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அவை என் ஊழியத்தைக் குறித்து மற்றவர்கள் எழுதின புத்தகங்கள். அமெரிக்க புகைப்பட சங்கத்தினரால் எடுக்கப்பட்ட புகைப் படமே அது. அது டக்ளஸ் ஸ்டூடியோ நிர்வாகத்தினரால் பதிப்புரிமை செய்யப்பட்டு அவர்களுக்கு சொந்தமானது. புத்தகங்கள் சகோ. கார்டன் லிண்ட்சேக்கும், சகோ. சாப்பிளை ஜூலியஸ் ஸ்டாட்ஸ்கிலெவுக்கும் சொந்தமானவை. அவைகளை நாங்கள் வாங்கி கூட்டங்களுக்கு கொண்டு வந்து, ஏறக்குறைய வாங்கின விலைக்கே விற்று, அவைகளில் நஷ்டமாகிறோம். இதை நாங்கள் எப்பொழுதுமே கூறி வந்துள்ளோம்... புத்தகங்கள் விற்பனை செய்பவர்களிடம், ''ஒரு ஏழை மனிதனோ அல்லது ஸ்திரீயோ அங்கு வந்து, அவர்களிடம் புத்தகம் வாங்கப் பணமில்லாமல் போனால், அவர்களுக்கு இலவசமாய் கொடுத்து விடுங்கள். அதற்கானதை நான் பார்த்துக் கொள்கிறேன்“ என்று கூறியிருக்கிறேன். நீங்கள் புத்தகத்தை வாங்கி சென்று, அது உபயோகமில்லை என்று நினைக்க நேர்ந்தால், அதை திருப்பிக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் செலுத்தின கிரயத்தை திருப்பிக் கொடுக்காமல், புத்தகத்தை உங்களிடமிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளமாட்டோம். உங்கள் விசுவாசத்துக்கு உதவி செய்யவே இவை. அதைத்தான் நாங்கள் செய்ய முயன்று வருகிறோம். இல்லையென்றால் இப்புத்தகங்களை நாங்கள் இங்கு அனுமதித்திருக்க மாட்டோம். அது முற்றிலும் உண்மை. இன்றிரவு அவை விற்பனை நிலையத்தில் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என் அருமை நண்பர் திரு. மற்றும் திருமதி. உட். அவர்களுடைய மகன் இளம் பிள்ளை வாதத்திலிருந்து (Polio) எப்படி குணமடைந்தான் என்று அவர்களுடைய சாட்சியைக் கூற நேரமிருந்தால் நலமாயிருக்கும். இன்னும் இந்த கூட்டத்தில் வந்திருந்தவர்களுக்கு அநேக காரியங்கள் நிகழ்ந்துள்ளன. 25இப்பொழுது ஆபிரகாமின் பின்புறக்காட்சியைக் காண் போம் - முதலாவதாக தேவன் ஆபிரகாமை சந்தித்து, நிபந்தனையின்றி, அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஆபிரகாம் தேவனை விசுவாசிப்பதை தவிர வேறொன்றுமே செய்ய வேண்டியதில்லை. உடன்படிக்கை முழுவதுமாக கிருபையினால் எவ்வித நிபந்தனையின்றி அளிக்கப்பட்ட ஒன்று. ''நீ செய்வாயானால்'' என்றல்ல; தேவன், “நான் செய்துவிட்டேன்'' என்றார். ஒவ்வொரு மனிதனும்... தேவனிடம் சேரும் ஆபிரகாமின் சந்ததியிலுள்ள அனைவரும் அதே வழியில் வரவேண்டும். நீங்கள் செய்யக் கூடியது ஒன்றுமேயில்லை. காலணிகளை அணிந்து நீங்கள் எப்படி சந்திரனுக்குள் குதிக்க முடியாதோ, அவ்வாறே உங்களை நீங்கள் இரட்சித்துக் கொள்ள முடியாது. எந்த மனிதனுமே தேவனைத் தேடினதில்லை; தேவன் தான் மனிதனைத் தேடுகிறார். ''நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண்டேன்'' என்று இயேசு கூறினார். (யோவான் 15:16) முதன் முறை... 26நீங்கள் பன்றியிடம் சென்று அது அழுக்கைத் தின்பது தவறென்று கூறமுடியுமா? உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போகும்படி அது கூறிவிடும். அதன் சுபாவத்தை மாற்றி, அது தவறென்று உணரச் செய்ய ஏதோ ஒன்று அவசியம். அந்த பன்றிக்கு முதலாவதாக ஏதாவதொன்று சம்பவிக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் கிறிஸ்தவர்களென்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் பல முறை சேற்றில் விழுந்து புரண்டு, பாவத்துக்கு திரும்பிச் செல்கின்றனர். ஏனெனில்... ஒரு பன்றியை நீங்கள் கழுவி நகங்களுக்கு வர்ணம் பூசி, உதடு சாயத்தை தேய்க்கலாம். உதடு சாயம் தேய்ப்பது தவறு. அதன் பெயர் என்ன? அந்த உதடு சாயத்துக்கு? அது எனக்கு அடிக்கடி மறந்துவிடுகிறது. அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு பன்றிக்கு உதடு சாயம் தேய்த்து, மற்ற அழகூட்டும் பொருட்களை உபயோகித்து அதை அழகுபடுத்தினாலும், அது நேராக சேற்றுக்கே திரும்பச் செல்லும். ஏன்? அது துவக்கத்திலேயே பன்றியாக உள்ளது. அதை நீங்கள் வித்தியாசமாக்கக் கூடிய ஒரே வழி, அதன் சுபாவத்தை மாற்றுவதே. அந்த ஒரு வழியில் மாத்திரமே எந்த மனிதனும் ஸ்திரீயும் தேவனுடன் இணையமுடியும். அவர்களுடைய சுபாவம் மாற வேண்டும். அவர்கள் கழுவப்பட்டு, பழைய மனிதனின் பாவத்துக்கு மரித்து, தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்க வேண்டும். கிறிஸ்துவே தேவனுடைய ஆவி; கிறிஸ்துவே வார்த்தை. அப்பொழுது அது வார்த்தைக்கு சாட்சியாயிருக்கிறது. அந்த ஒரு வழியில் மாத்திரமே நாம் அப்படி செய்ய முடியும். 27ஆபிரகாம் தேவன் தாமே கட்டி உண்டாக்கின நகரத்துக்கு காத்திருந்தான். இன்றைக்கு நாமும் அந்நியரும் பரதேசிகளுமாய் இருந்து, தேவன் தாமே கட்டி உண்டாக்கின நகரத்துக்கு காத்திருக்கிறோம். கவனியுங்கள்! ஆபிரகாம் எதையும் அறிவதற்கு முன்னமே, அவனுக்குள் ஏதோ ஒருவகையான உள்ளுணர்வு போன்ற ஒன்று இருந்து, அந்த நகரத்துக்கு காத்திருந்தான். இன்றைக்கு நான் மனைவியுடன் வந்து கொண்டிருந்த போது, இந்த மலையின் மேல் உள்ள இடம் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் அழகான காடுகளாலும் உயர்ந்த மரங்களாலும் நிறைந்திருந்தது, எவ்வளவு அழகாயிருந்திருக்கும்! ஆனால் மனிதன் வந்து அவைகளை வெட்டிப் போட்டு, ஆறுகளை மாசுபடுத்திவிட்டான். இது தங்குவதற்கு மிகவும்அழகான ஸ்தலமாக இருந்திருக்கும்'' என்றேன். ஆம், ஆனால் பாருங்கள், அவன் வீடுகளைக் கட்டினான். அவர்கள் பலுகிப் பெருகத் தொடங்கினார்கள். பாவமும் வன்முறையும் நுழைந்தன. திரைப்படங்களின் மூலம் ஹாலிவுட் அவனுக்கு அருகாமையிலும் வந்தது, தொலைகாட்சியும் கூட சேர்ந்தது. இப்பொழுது ஒவ்வொரு நகரமும் மாசுபட்டு பாவம் நிறைந்ததாயுள்ளது. நிச்சயமாக ஜனங்கள் அண்டை வீட்டாருடன் சமாதானமுள்ளவர்களாயும் நீதியுள்ளவர்களாயும் வாழவேண்டுமெனும் உள்ளுணர்வு அவர்களுக்கு உள்ளது போல், நிச்சயமாக ஒரு நகரம் எங்கோ உள்ளது! ஆழம் ஆழத்தை நோக்கிக் கூப்பிடுகிறது! 28ஆபிரகாம் தன் நாளிலிருந்த ஊர் என்கிற கல்தேயா போன்ற நகரங்களைக் கண்டான். அவனுக்குள்ளிருந்த ஏதோ ஒன்று தேவன் தாமே கட்டி உண்டாக்கின வித்தியாசமான ஒரு நகரம் அழைக்கிறது என்பதை அவன் அறிந்திருந்தான். தேவன் ஆபிரகாமில் அதைக் கண்டு, ''உன்னை இப்பொழுது பிரித்துக் கொண்டு வெளியே வா'' என்றார். நீங்கள் ஆபிரகாமைக் குறித்து ஒன்றைக் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அவன் ஒரு எழுத்தும் பிசகாமல் தேவனுடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்தான். அதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் என் செய்தி. நீங்கள் வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும். அதற்கு ஏதாகிலும் ஒன்று முரணாயுள்ளது என்று நீங்கள் அறிந்திருந்தால், அதை தனியே விட்டுவிடுங்கள். அது ஒருக்கால் காண்பதற்கு நன்றாயிருக்கலாம், ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் யோசனை செய்யாதீர்கள். சாத்தான் செய்த முதலாவது காரியம் அதுவே. அவன் ஏவாளிடம் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான யோசனை செய்து காண்பித்தான். சாத்தான் கூறினதை ஏவாள் சிறிதேனும் சந்தேகப்படவில்லை. அவளும் யோசனை செய்தாள். சாத்தான் அதை யோசனை செய்தான். இன்றைக்கு அவர்கள் அவ்வாறே செய்கின்றனர். ''நாம் இப்படி செய்வது நியாயமானதல்லவா? அது தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக இருந்தால், அதை தனியே விட்டுவிடுங்கள்! அது சாத்தானின் சத்தம். 29உங்களுக்குள் வார்த்தை இருக்குமானால்... “நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ பரிசுத்த ஆவி” நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் அதாவது வார்த்தை மாம்சமாதல். ''நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ, அது உங்களுக்குச் செய்யப்படும். அதுதான் வழி. எல்லா கோட் பாடுகளையும், எல்லாவற்றையும் அகற்றிவிட்டு, வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது கிறிஸ்து. கவனியுங்கள், அப்பொழுது அது தன்னை வெளிப்படுத்தும். யாரோ ஒருவர், ''சகோ. பிரன்ஹாமே, நீங்கள் எப்படி அதை அறிந்து கொள்கிறீர்கள்? எப்படி?'' என்று கேட்டார்கள். நீங்கள் இந்த கூட்டத்தில் காண்பவை சிறிய விஷயங்களே. இந்த கூட்டங்களுக்கு பிரயாணப்பட்டு வந்துள்ள எவரும் இதை அறிவர். அநேக வாரங்களுக்கும் மாதங்களுக்கும் பிறகு நடக்க இருப்பவைகளை பரிசுத்த ஆவி வெளிப்படுத்தி தந்திருக்கிறார். அது ஒரு முறையாகிலும் தவறினதா என்று யாரையாகிலும் கேட்டுப் பாருங்கள். அது தவற முடியாது, பாருங்கள். ''அது உங்களுக்கு எப்படி தெரியும்?'' ஏனெனில் அது வார்த்தை உரைத்த வாக்குத்தத்தமாயுள்ளது, இந்த வேளை இப்பொழுது இங்குள்ளது. அது நிறைவேற வேண்டும். எனக்குத் தெரியாது. ஒரு சிலரே, சிறுபான்மையோர் மாத்திரமே இதை விசுவாசிப்பார்கள். இருப்பினும் அது நடந்து கொண்டே செல்லும். நீங்கள் இதை கவனித்ததுண்டா, ஜனங்கள் அதை அடையாளம் கண்டு கொள்வதற்கு முன்பே, அது ஜனங்களின் தலைக்கு மேலே கடந்து சென்று, அது நிகழ்ந்துவிடுகிறது. அது எப்பொழுதும் அவ்விதமாகவே உள்ளது. 30கத்தோலிக்க மக்களே, உங்கள் சபை என்ன செய்ததென்று உங்களுக்குத் தெரியுமா? ஜோன் ஆஃப் ஆர்க் தேவனுடைய உண்மையான பரிசுத்தவாட்டி. அவள் தேவனுடைய அற்புதங்களைச் செய்து, தேவனைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தாள். ஆனால் நீங்கள் அவளை மந்திரவாதியென்று அழைத்து, அவள் இரக்கத்துக்காக கூக்குரலிட்ட போது, அவளை கொழுமரத்தில் கட்டி எரித்துவிட்டீர்கள். நூற்றாண்டுகள் கழிந்த பின்பு, உங்கள் தவறை உணர்ந்து, அவளை பரிசுத்தவாட்டியாக்கினீர்கள். அவள் உங்களைக் கடந்து சென்றாள். நீங்களோ அவளை அறியவில்லை. எலியா கடந்து சென்றான், அவர்கள் அவனை அறிந்து கொள்ளாமல், “போலியான கிழவன்'' என்றழைத்தனர். கிறிஸ்து அவர்கள் மத்தியில் கடந்து சென்றார்; அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் வரைக்கும் அவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. தேவன் அப்படித்தான் அதை அமைக்கிறார். அது அவிசுவாசியின் கண்களை முற்றிலுமாக மறைத்துவிடுகிறது. அது என்ன காண்பிக்கிறதென்றால் அவர் “இதை நான் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, இதை ஏற்றுக்கொள்ளும் பாலகருக்கு வெளிப்படுத்துவேன்'' என்றுரைத்தார். அப்படி செய்ததற்காக கிறிஸ்து தேவனை ஸ்தோத்தரித்தார். (மத் 11:25; லூக் 10:21) பாருங்கள்? உங்களைத் தாழ்த்துங்கள். இதை விசுவாசியுங்கள். வார்த்தையைப் பரிசோதித்துப் பாருங்கள். இயேசு, 'வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே, நீங்கள் இந்த வேளையை அறிந்திருக்க வேண்டும் என்றார். அவர் பரிசேயரை நோக்கி, “மாய்மாலக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் நாளையும் அறிந்திருப்பீர்கள்'' என்றார். அவர் அவர்களைக் கடந்து சென்றார். அது கடந்து செல்லும் வரைக்கும் அவர்கள் அறியவில்லை. வார்த்தை மிகவும் முக்கியமானது என்பதை இப்பொழுது கவனியுங்கள். 31இதை நாம்சிந்திக்கும் போது, வேறொன்றைக் கவனியுங் கள் - லோத்தை. இயேசு, ''லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்' என்றார். வார்த்தை அவ்வளவு முக்கியமாக இராமல், மனித யோசனையே சரியாக இருக்குமானால்; தூதன் லோத்தினிடமும் அவனுடைய குடும்பத்தினரிடமும், “சோவா ருக்குப் போங்கள் பின்னிட்டுப் பாராதேயுங்கள்,'' என்று கூறின போது, லோத்தின் மனைவிதிரும்பிப் பார்க்கும் ஒரு மிகச் சிறிய செயலைப் புரிந்தாள், ஆனால் அது வார்த்தைக்கு முரணாயிருந்த காரணத்தால், அவள் உப்புத் தூணாக மாறினாள். அப்படியிருக்க நீங்கள், 'நீங்கள் என்ன பெண்கள் தலைம யிரைக் கத்தரித்துக் கொள்வதைக்குறித்தும் இப்படிப்பட்ட ஆடைகள் அணிவதைக் குறித்தும் குறைகூறுகின்றீர்களே...'' என்கின்றீர்கள். அப்படி செய்யவேண்டாமென்றுதேவன் கூறியுள் ளார்! நீங்கள் வார்த்தையைப் பின்பற்றுங்கள். லோத்துக்கு ஒரு அருமையான மனைவி இருந்தாள் என்பதில்சந்தேகமில்லை. ஆனால் அவள் வார்த்தை கட்டளையிட்டதை பின்பற்றவில்லை. ஏவாள் நல்லவள், ஆனால் அவள் வார்த்தையின்கட்டளையைப் பின்பற்ற வில்லை. அவள் அதை சற்று சிந்தித்து பார்த்தாள். 32“சகோ. பிரன்ஹாமே, இதை நான் செய்வது நியாயமல்லவா? நான் அமெரிக்க குடிமகள் அல்லவா? எனக்கு விருப்பமானதை செய்ய எனக்கு உரிமை உண்டு. அது என்னுடைய அமெரிக்க உரிமை''. அது உன்னுடைய அமெரிக்க உரிமையாயிருக்கலாம், ஆனால் கிறிஸ்தவ உரிமையல்ல. நீ கிறிஸ்தவளாயிருந்தால், செம்மறியாடாக இருக்கிறாய். ஒரு செம்மறியாடு தன் உரிமையை பறிகொடுத்து விடுகிறது. அது அமைதியாக படுத்திருந்து, அதற்குள்ள உரிமையை நீங்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் வெள்ளாடோ அதைக் குறித்து சச்சரவு உண்டாக்கும். அது உண்மை. ஆனால் செம்மறியாடு தன் உரிமையை பறி கொடுத்துவிடுகிறது. ஒரு கிறிஸ்தவனும் தன் தேசிய உரிமைகள் கிறிஸ்தவ உரிமைகளுக்கு முரணாயிருக்குமானால் தேசிய உரிமைகளை பறிகொடுத்துவிடுகிறான். லோத்தின் மனைவி சும்மா திரும்பிப் பார்த்தாள் (சகோ. பிரன்ஹாம் விரல்களைச் சொடுக்குகிறார் - ஆசி). அவ்வளவுதான்! அது என்ன செய்தது? ஆபிரகாமும் லோத்தும் செய்தவை இங்கு நமக்கு எடுத்துக் கூறப்பட்டு, அவை திருஷ்டாந்தங்களாக நமக்கு அமைந்துள்ளன. அதனின்று நாம் தப்ப முடியாது. இவையெல்லாம் திருஷ்டாந்தங்களாக நமக்கு வைக்கப்பட்டுள்ளது என்று எபிரெயர் 11 அதிகாரம் உரைக்கிறது. ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்க, நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தை நாம் தள்ளிவிடவேண்டும். பாவம் என்பது என்ன? அவிசுவாசம்! ''நம்மை சுற்றி நெருங்கி நிற்கிற ஒவ்வொரு பாவத்தையும், தேவனைக் குறித்த எல்லா அவிசுவாசத்தையும்'' 33நமது கருத்துக்கு விரோதமான ஒன்றை நாம் கேட்க நேரிட்டால், நீங்கள், “அவர்கள் அதை பிரசங்கிக்கின்றனர். ஆனால் அது...'' என்கிறீர்கள். அப்படி செய்யாதீர்கள்! தேவன் எதை செய்யக் கூறியுள்ளாரோ அதை செய்யுங்கள். அதன் ஒவ்வொரு எழுத்திலும் நிலைத்திருங்கள்! “அதனால் ஒரு வித்தியாசமுமில்லை” என்கிறீர்கள். சரி, நான் சொல்லக்கூடிய ஒன்றே ஒன்று வார்த்தை கூறுவதையே. இயேசு மிகவும் கண்டிப்பாக “லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்'' என்றார். அவள் சும்மா திரும்பிப்பார்த்தாள். ஏவாள் வெறுமனே ஒரு வினாடி நின்றாள். அவ்வளவுதான் அவள் செய்தாள். லோத்தின் மனைவி திரும்பி பார்க்க மாத்திரமே செய்தாள். தேவன் அந்த நீதிமானாகிய லோத்தின் மனைவியை, அவளுடைய சிறு செயலின் காரணமாக, உப்புத் தூணாக மாற்றினார். அவள் தேவனுடைய கட்டளையை மீறி, அது என்ன நெருப்பு என்று காண திரும்பி நோக்கினாள். அதன் விளைவாக அவள் உப்புத்தூணாக மாறினாள், தேவன் அதன் உண்மையான அர்த்தத்தில் கூறினார் என்பதற்கு அது இன்று வரையிலும் நமக்கு சான்றாக அமைந்துள்ளது. ஓ, உண்மையான விசுவாசம் மாத்திரம் ஜனங்களுக்குள் நங்கூரமிடப்பட்டால் ''விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினால் வரும்“. (ரோமர் 10:17) 34ஏவாள் ஒரு வினாடி நின்றாள். அவ்வளவுதான் அவள் செய்தாள். சாத்தான் அவளை பிடித்து, அவளுடன் அதை சிந்திக்க தலைப்பட்டான். அது நியாயமானதல்லவா? சகோதரி இன்னார் அதை செய்யலாம் என்றால் நீயும் செய்யலாமல்லவா? அவள் போதகரின் மனைவி அதுயாராயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாக அமைந்திருந்தால், அதற்கு செவி கொடாதிருங்கள், நீங்கள் நேராக சென்று கொண்டிருங்கள்! திருஷ்டாந்தங்கள்! ஆபிரகாம் அப்படித்தான் செய்தான். அக்காலத்து மருத்துவ விஞ்ஞானம் அவன் குழந்தை பெற முடியாதென்று அவனுடைய சிந்தனையை எவ்வளவாக தூண்டியிருக்கும்! அதுவும் அவனுக்கு எழுபத்தைந்து வயதான போது! ஆனால் அவனுக்கு நூறு வயதான போதும் அவன் முன்பைக் காட்டிலும் அதை அதிகமாக விசுவாசித்தான் என்று நாம் காண்கிறோம். இருபத்தைந்து ஆண்டுகளாக அவனுடைய விசுவாசம் வளர்ந்து கொண்டே வந்தது. அது எனக்கு பிரியம். ஆம், ஐயா. 35நாம் எழுந்து செல்வதற்கு முன்பு, வேறொரு விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நீங்கள் கவனித்தீர்களா? நீங்கள் புரிந்து கொண்டீர்களென்று நம்புகிறேன். அந்த உடன்படிக்கை உறுதிப்படும்போது, அதை எழுதி இரண்டாக கிழித்தல். உங்களுக்கு புரிந்ததா? அதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், உங்கள் கைகளையுயர்த்துங்கள். உடன்படிக்கை எழுதப்பட்டு, கிழிக்கப்படுதல். தேவன் திரித்துவத்தைக் கொண்டவராய் ஒருவராக வெளிப்படுதல்; அதை கிழித்து, சரீரத்தை உன்னதத்துக்கு எடுத்துக்கொண்டு, சபையில் ஜீவிப்பதற்கென பரிசுத்த ஆவியை திரும்ப அனுப்பி, அந்த சரீரம் செய்ததையே, மனைவி, மணவாட்டி என்னும் முறையில் செய்தல். அதே ஆவி, அதே கிரியை, அதே உபதேசம், எல்லாமே அவர் செய்தது போன்றே, அதே அடையாளம். “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.'' கவனியுங்கள்! ஒருக்கால் ஒரு யூதன் இங்கு உட்கார்ந்திருக்க வகையுண்டு. பாருங்கள், தேவன் இந்த காரியங்களை செய்கிறார், அது ஜனங்களின் மத்தியில் நடக்கிறது, இருப்பினும் அவர்கள் அறிந்து கொள்வதில்லை . பெண்கள் தங்கள் விவாகத்தின் போது ஏன் முகத்தை முக்காடிட்டுக் கொள்கிறார்கள் என்பதற்கு நான் விளக்கம் கூறினது போல். ஏன்? அவர்களுக்கு ஒரு வேளை அது புரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், அவர்கள் தலையில்லாத சரீரம் என்றும், கணவனே அவர்களுக்குத் தலையென்றும் அதன் மூலம் காண்பிக்கின்றனர். ஆகையால் தான் ரெபெக்காள் முக்காடிட்டிருந்தாள். ஆகையால் தான் சபையும் தன்னை முக்காடிட்டுக் கொண்டு கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஏனெனில் அவர் தலையாயிருக்கிறார், அவரே வார்த்தை. 36இப்பொழுது யூதன், யாம் கிப்பூர், அவர்கள் இராப் போஜனம் அல்லது பஸ்காவை ஆசரிக்கும் போது; அது யூதனென்று எவருக்கும் தெரியும். மூடியின் கீழ் பிட்கப்பட்ட அப்பம் (Kosher) இருக்கும் என்று தெரியும். எனக்குத் தெரிந்த எந்த யூதனும், நான் அவனிடம் பேசினபோது, பிட்கப்பட்ட அப்பம் ஏன் அங்குள்ளது என்று விளக்கம் தரமுடியவில்லை. அது உடன்படிக்கையின் உறுதிப்படுதலாக, கிறிஸ்துவின் நொறுக்கப்பட்ட சரீரத்துக்கு எடுத்துக்காட்டாய் உள்ளது - அவர் மனிதனிலிருந்து தேவனை பிரித்த போது. அவர் ஒருங்கே தேவனும் மனிதனுமாய் இருந்தார். அவர் ஆவியை மேலே எடுத்தபோது... கவனியுங்கள், இயேசு, ''நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்'' என்றார். அது தேவன் அவருடைய ஜனங்களுக்குள் இருப்பது அதே தேவன்! அவர் அங்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார், அதைக் குறித்து நேற்றிரவு நாம் பேசினோம். தேவன் இறங்கி வந்தார். யேகோவா - யீரே, யேகோவா - ராஃபா, யேகோவா - மனாசே, ஏலோகிம், எல்லாம் போதுமானவர், பெலமுள்ளவர், மார்பகமுள்ளவர், அவருடைய பட்டப் பெயர்கள் அனைத்தும் கொண்ட வராய் மனித சரீரத்தில் வெளிப்பட்டு, மனித உணவை உண்டு, அவர்களுடைய கண்களுக்கு மறைந்து போனார். தேவன்! 37இயேசு இவ்வுலகில் வந்தபோது, “அந்த நாளில் நடந்தது போல் நடக்கும்'' என்றார். தேவன்! அதுவே மூடியின் கீழுள்ள பிட்கப்பட்ட அப்பம்; அவர்கள் சாப்பிடும் ஒன்றல்ல. ஆனால் பிட்கப்பட்ட ஒன்று. அவர்கள் ஏன் அதை புரிந்து கொள்வதில்லை? இயேசு தோல்சுருளை கையிலெடுத்து படித்த போதும் அதே விதமாகத்தான் இருந்தது. அவர் வசனத்தின் ஒரு பாகத்தை மாத்திரம் வாசித்துவிட்டு நிறுத்திக் கொண்டார். மற்ற பாகத்தை அவர் வாசிக்கவில்லை. ஏனெனில் அது அந்த நாளில் அவரைக் குறித்த ஒன்றாகும். அது அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்த பாகம். அதன் காரணமாகத்தான் யூதர்கள் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏனெனில் அவர்கள் குருடாக்கப்பட வேண்டி யிருந்தது. அவர்களுடைய மேசியா அங்கிருந்த போதும் அவர்களால் அவரை அறிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறை அவர்கள் பஸ்கா ஆசரிக்கும் போது, பிட்கப்பட்ட அப்பம் அங்குள்ளது, அவர்களோ அதை அறிவதில்லை. ஒருமுறை நான் ரபியைக் கேட்டேன். அவர் ''அப்படி செய்வதற்கு நாங்கள் போதிக்கப்பட்டிருக்கிறோம்'' என்றார். நான், “ஏன் அப்படி செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன், அவர், எனக்குத் தெரியாது, யாருக்குமே தெரியாது“ என்றார். பாருங்கள், ஒரு ஸ்திரீ தன் முகத்தை முக்காடிட்டு மூடிக் கொள்கிறாள், அது எதற்காக என்று அவளுக்குத் தெரிவதில்லை. அவள் தன் கணவனை தலையாக இருக்க அனுமதிப்பதற்கு பதிலாக, அவள் கணவனுக்குத் தலையாயிருக்கிறாள். அது நிலைகுலைந்த ஒன்று. அது அமெரிக்கா மனப்பான்மை. பிட்கப்பட்ட அப்பத்தின் விஷயத்திலும் அதுவே. நாம் கவனிக்கிறோம், இதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். இன்றிரவு நான் பேசவிருக்கும் விஷயத்துக்கு இதை முன்னுரையாகக் கூற விரும்புகிறேன். 38ஆபிரகாமுடனும் அவனுக்குப் பின்வரும் சந்ததியுடனும் செய்யப்பட்ட உடன்படிக்கையைக் குறித்து நேற்றிரவு பேசினது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அது ஆபிரகாமின் மாம்ச பிரகாரமான சந்ததி விசுவாசம் செயல்பட்ட தன் மூலம் அது உண்டானது. ஆனால் ஆபிரகாமின் உண்மையான சந்ததி கிறிஸ்துவே, வேதாகமம்... அவரே ஆபிரகாமின் ராஜரீக சந்ததி. இப்பொழுது கவனியுங்கள். ஆபிரகாமின் நாளிலே சோதோம் அக்கினியால் அழிக்கப்படுவதற்கு முன்பு ஆபிரகாமுக்கும் தெரிந்து கொள்ளப்பட்ட அவனுடைய குழுவுக்கும் ஒரு அடையாளம் செய்து காண்பிக்கப்பட்டது. அதாவது, தேவன் மனித உருவில் இறங்கி வந்து, தமது முதுகை சாராள் இருந்த கூடராத்தின் பக்கம் திருப்பி, சாராள் கூடாரத்தில் என்ன கூறினாள் என்பதை உரைத்தார். இயேசு இவ்வுலகிற்கு வந்த போது காலத்தின் முடிவில் அதே காரியம் சம்பவிக்கும் என்றார். மேசியா வந்த போது, ஆபிரகாமுடைய மாம்சப் பிரகாரமான சந்ததி..., சீமோன் இயேசுவிடம் வந்தான். அவர் அவனுடைய இருதயத்திலுள்ள இரகசியத்தை அறிந்து, அவனுடைய பெயர் சீமோன் என்றும், அவன் யோனாவின் குமாரன் என்றும் உரைத்தார். பின்பு பிலிப்பு அழைத்து வந்த நாத்தான்வேலிடம், ''நீ மரத்தின் கீழிருந்த போது உன்னைக் கண்டேன்'' என்றார். கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயிடம், “உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்'' என்றார். அவள், ''ஐயா, நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன்'' என்றாள். பாருங்கள். ஆபிரகாமின் மாம்சப் பிரகாரமான சந்ததி அவர்களுடைய நாட்களின் முடிவில் அந்த அடையாளத்தைப் பெற்றது. ராஜரீக சந்ததியாகிய கிறிஸ்துவே, தங்கள் நாட்களின் முடிவில் ராஜரீக சந்ததி அதே அடையாளத்தைப் பெறும் என்றார். நீங்கள் புரிந்து கொண்டீர்களென நம்புகிறேன். 39அவனை மாற்றினார். கவனியுங்கள், தேவன் ஆபிரகாமின் பெயரை மாற்றினார். அதை இங்கு விட்டுவிடுவது நலம். நான் நீண்ட எழுப்புதல் ஒன்றுக்கு திரும்பி வரும் போது, இதைக் குறித்து பார்க்கலாம், பூமிக்குரிய அவனுடைய பெயரை தேவனால் அளிக்கப்பட்ட பெயருக்கு அவர் மாற்ற வேண்டியிருந்தது. நீங்கள், மனிதனுடைய பெயர் நமக்கு எவ்வகையில் முக்கியம் வாய்ந்தது. ஏதாகிலும் அப்படி உண்டா?'' என்கிறீர்கள். ஓ, சகோதரனே, நீங்கள் மாத்திரம் அறிந்தால் நாம் காணும் இந்த நவீன பெயர்கள்! அவைகளைக் கூற எனக்கு விருப்பமில்லை, ஏனெனில் அது உங்கள் மனதை புண்படுத்தும். ஆனால் தேவன் அர்த்தமுள்ள பெயர்களை வைத்திருக்கிறார், அது பாதை முழுவதையுமே மாற்றிவிடுகிறது. ஓ, நீங்கள், “மூடத்தனம்'' எனலாம். யாக்கோபைக் குறித்தென்ன? அவன் தேவனுக்கு முன்னால் பிரபுவாக ஆவதற்கு முன்பு, அவனுடைய பெயர் யாக்கோபு என்பதிலிருந்து இஸ்ரவேல் என்று மாற்றப்பட வேண்டியிருந்தது. அது சரியா? நிச்சயமாக. பவுலும் அப்படித்தான். அவனுடைய பெயர் சவுல் என்பதிலிருந்து பவுல் என்று மாற வேண்டியிருந்தது. தேவன் பெயர்களை மாற்றின எத்தனையோ சம்பவங்களை நாம் கூறிக்கொண்டே செல்லலாம். ஆபிராம் என்பதிலிருந்து ஆபிரகாம்; சாராய் என்பதிலிருந்து சாராள். ஓ, என்னே! ஒரு சிறு சபையிலுள்ள தெரிந்து கொள்ளப்பட்ட குழுவிடம் இதை போதித்து, தேவன் செய்வதை நீங்கள் காணும்போது உங்கள் இருதயங்களில் எழும் அல்லேலூயாக்களைக் காண்பது எவ்வளவு ஆசீர்வாதமாயுள்ளது! 40நேற்றிரவு நான் “வரிகளுக்கிடையே அடங்கியுள்ள மறை பொருள்'', ''உறுதிப்படுத்துதல் ஆகியவைகளுக்கு விளக்கம் அளித்தேன். என் பொருளுக்கு செல்வதற்கு முன்பாக அதை மறுபடியும் கூற விரும்புகிறேன். அதாவது, தேவன் ஆபிரகாமையும் சாராளையும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை அவர்கள் பெறுவதற்கு முன்னர், வயோதிப , சுருக்கம் விழுந்த நிலையிலிருந்து இளம் தம்பதிகளாக மாற்றினார். அவர்கள் பெற்ற கடைசி அடையாளம், தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு, அவருக்குப் பின்னால் கூடாரத்திலிருந்த ஒரு ஸ்திரீயின் இருதயத்திலுள்ள இரகசியத்தை அறிந்து கொண்டதே. அடுத்ததாக நிகழ்ந்தது , அவர்களுடைய சரீரங்கள் மாறின. நேற்றிரவு அதிக தாமதாகிக் கொண்டே சென்றது, சிலர் இதைக் குறித்து வியந்ததை நான் உணர்ந்தேன். எனவே இதை இன்னும் சிறிது விளக்க விரும்புகிறேன்! அதற்கான நிரூபணம் என்னவெனில், இருவரும் நீண்ட பிரயாணம் செய்தபோது, அவர்கள் முற்றிலும் மாற்றப்பட்டனர். வேதாகமம், ''அவர்கள் இருவரும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள். ஆபிரகாமின் சரீரம் செத்துப் போயிருந்தது, சாராளின் கர்ப்பமும் செத்துப் போயிருந்தது'' என்றுரைக்கிறது, அது சரியா? அவர்கள் செத்துப் போயிருந்தனர் என்று நாமறிவோம். ஆனால் தேவன் அவர்களை மாற்றினார். அப்படி அவர் செய்தார் என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறேன். முதலாவதாக ஏன் ஒரு பெலிஸ்தியன் - (இல்லை...), ஆம் அது பெலிஸ்திய ராஜா என்று நினைக்கிறேன் - கிழவியாகிய சாராள் மேல் காதல் கொள்ள வேண்டும்? அவள் காண்பதற்கு அழகாயிருந்தாள். 41வேறொரு காரியம் ஈசாக்கு பிறந்தபோது, ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்து மரிக்க வேண்டிய தருவாயில் இருந்தனர். ஆனால் அவர்கள் அதற்குப் பின்பும் அநேக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தனர், ஈசாக்கு தன் நாற்பதாம் வயதிலே விவாகம் செய்து கொண்டான்; சாராள் மரித்தாள். ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெண்ணை விவாகம் செய்து, அவள் மூலம் குமாரத்திகளைத் தவிர ஐந்தாறு குமாரர்களைப் பெற்றான். ஆனால் அதற்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அவன் செத்ததற்கு சமமாயிருந்தான்! கேத்தூராள். அதன் பிறகு ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் கழித்து அவன் கேத்தூராளை மணந்து, குமாரத்திகளைத் தவிர ஆறு குமாரர்களைப் பெற்றான்; ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அவன் செத்தவனைப் போலிருந்தான். அல்லேலூயா! பார்த்தீர்களா? தேவனுடைய வாக்குத்தத்தம் உறுதியானது. ஆமென், ஓ, அது எனக்கு பிரியம்! நீங்கள் தனியே சென்று அதைப் படியுங்கள்! இன்று காட்டில் வேதத்தைப் படித்துக் கொண்டிருந்த போது, எனக்கு ஒரு சிறு வெளிப்பாடு கிடைத்தது. அதை விவரிக்க விரும்புகிறேன். 42தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் ஒரு சமயம் எகிப்தில் அடிமைகளாக விற்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அங்கிருந்ததை தவிர்க்க முடியவில்லை. தேவனுடைய மகத்தான முன்குறித்த திட்டம் அவர்களை அங்கு அனுப்பினது. அவர்கள் அந்நிய தேசத்தில் நானூறு ஆண்டுகள் பரதேசிகளாய் சஞ்சரிப்பார்கள் என்று அவர் ஆபிரகாமிடம் கூறினார். அவர்கள் அடிமைகளாக அங்கிருந்தனர். ஒரு எகிப்தியன் எபிரெயப் பெண்களை கற்பழிக்க நினைத்தால் அவனை யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள். எபிரெய வாலிபர்களை அவர்கள் கொல்ல நினைத்து கொன்றால், யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அவர்கள் அங்கு அடிமைகளாயிருந்தனர். அவர்கள் ரொட்டியை அவர்களிடம் எறிவார்கள், விருப்பமானால் அவர்கள் புசிக்கலாம், இல்லையென்றால் புசிக்காமல் இருந்துவிடலாம். அவர்கள் குறை கூறினால் கொல்லப்படுவார்கள். தேவனுடைய ஜனங்களுக்கு என்னே ஒரு இடம்! 43ஆனால் ஒருநாள், அல்லேலூயா, தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நினைவு கூர்ந்தார். மகிமை! நான் மறுபடியும் பக்தி பரவசப்படுகிறேன். கவனியுங்கள், தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நினைவு கூர்ந்தார். அவர் ஒரு தீர்க்கதரிசியின் மேல் அக்கினி ஸ்தம்பத்தை வைத்து அவனை அபிஷேகம் செய்தார். அவன் தேசத்துக்குள் வந்து, தவற முடியாத தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவர்களுக்கு நினைவுபடுத்தினான். தேவன் தமது வார்த்தையை உறுதிபடுத்த அங்கிருந்தார். உண்மை. அவன் தேவன் அவர்களுக்கு அளித்துள்ள பாலும் தேனும் ஓடுகிற தேசத்தைக் குறித்து அவர்களிடம் கூறினான். அக்கினி ஸ்தம்பத்தை தன் தலைக்கு மேல் கொண்டிருந்த அந்த தீர்க்கதரிசியினுடைய சாட்சியின் ஆதாரத்தின் பேரில் அவர்கள் எகிப்திதை விட்டு வெளி நடந்தனர். ஏனெனில் அவன் தேவனால் அனுப்பப்பட்டவன். தேவன் அவனோடு கூட இருந்தார் என்பதை நிரூபித்தார். 44அவர்கள் காதேஸ்பர்னேயா என்னுமிடத்துக்கு வந்தனர், ஒரு சமயம் அது உலகின் நியாயாசனமாக விளங்கினது. அவர்களுக்கு யோசுவா என்னும் பெயர் கொண்ட ஒரு போர்வீரன் இருந்தான். எபிரெய மொழியில் யோசுவா என்னும் சொல்லுக்கு “யேகோவா இரட்சகர்'' என்று பொருள். யோசுவா ஒரு சிறந்த போர் வீரன்... ஞாபகம் கொள்ளுங்கள், இவர்கள் அந்த தேசத்தைக் கண்டதில்லை, அதைக் குறித்து கேள்விப்பட்டிருந்தனர். இப்பொழுது உங்களுக்கு அந்த உதாரணம் புரிகின்றதா? அவர்கள் அந்த தேசத்தைக் குறித்து கேள்விப்பட்டிருந்தனர். இந்த தேசத்துக்கு செல்வதற்கென அவர்கள் எல்லாவற்றையும் விட்டனர். ஏனெனில் கர்த்தருடைய வார்த்தை அவர்களிடம் கொண்டு வரப்பட்டு அவர்கள் அந்த தேசத்துக்கு செல்லும் பாதையில் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தினது. சபை தான் செல்லும் தேசத்தைக் குறித்து ஒன்றுமே அறியாமல் - யாருமே அங்கு செல்லவில்லை - தன் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு இது எவ்வளவு சிறந்த முன்னடையாளமாக அமைந்துள்ளது. ஆனால் அவர்கள் காதேஸில் எல்லைக்கு அருகாமையில் வந்தபோது, அந்த தேசத்துக்கு சென்று திரும்பி வந்த ஒருவனின் காரணமாக நியாயந்தீர்ப்பு இஸ்ரவேலரின் மேல் விழுந்து, அந்த இடம் நியாயாசனமாக விளங்கினது. யோசுவா யோர்தானைக் கடந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் சென்று, தேவன் கூறினவாறே அது அமைந்திருந்தது என்பதற்கு அத்தாட்சியைக் கொண்டு வந்தான். அந்த பேரின்ப தேசத்தில் விளைந்த திராட்சை பழங்களை அவர்கள் ருசி பார்த்தனர். 45அவர்களுக்கு அங்கு வீடு இருக்குமென்றும், அவர்கள் சுயதீனமாயிருந்து தங்கள் பிள்ளைகளை தேவபக்தியில் வளர்க்கலாமென்றும், அவர்களுக்கு ஒரு சபை இன்னும் மற்றவை இருக்குமென்றும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது. அவர்களுடைய அடிமைத்தனத்தினின்று அவர்கள் விடுதலையாகி, அந்த தேசத்திற்குள் கடந்து சென்று வீடுகளைப் பெற்றுக் கொள்ள அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி கொண்டிருந்தனர் கவனியுங்கள், அவர்கள் கடந்து சென்று தங்கள் வாழ்க்கையை நடத்தியிருந்தால் மிகவும் நன்றாயிருக்கும். ஆனால் முடிவில் மலை பாகங்கள் கல்லறைகளினால் நிறைந்தன. அவர்கள் வயது சென்று மரித்தனர். வயது சென்று மரித்தனர். தேவனுடைய ஜனங்கள். பிறகு ஒரு நாள் அவர்களெல்லாரைக் காட்டிலும் மிகப்பெரிய வீரர் தோன்றினார்- யேகோவா- இரட்சகர், இயேசு அவர் இங்கு வந்து, ''மரணத்துக்கு அப்பால் ஒரு வாழ்க்கை உண்டு. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்கு சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் மறுபடியும் வந்து அவருடைய வித்தை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன்“ என்றார். இந்த மகத்தான வீரர் அவருடைய காதேஸ்பர்னேயாவுக்கு நம்மெல்லாருக்கும் நியாயாசனமாக விளங்கும் கல்வாரிக்கு - வந்தார். அங்கு நம்முடைய அக்கிரமங்கள் எல்லாவற்றையும் அவர் மேல் சுமந்து கொண்டார். நாம் மரணம் என்றழைக்கும் அந்த யோர்தானை அவர் கடந்துசென்றார். யோசுவா மறுபடியும் நதியைக் கடந்து காதேஸ்பர்னேயாவுக்கு வந்தது போன்று, அவர் மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, ”மரித்துப் போன ஒருவன் மறுபடியுமாக உயிர்பெற முடியும்'' என்னும் அத்தாட்சியை கொண்டு வந்தார். 46அவர் இன்னும்அதை உங்களுக்கு ஊர்ஜிதப்படுத்த, “நீங்கள் எருசலேமுக்குப் போய் அங்கு காத்திருங்கள். அதற்கு அத்தாட்சியாக உங்களுக்கு முன் தொகையை கொடுக்க போகிறேன்'' என்றார். அவர்கள் எருசலேமுக்குச் சென்று, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல நித்திய ஜீவன் வரும் வரைக்கும் காத்திருந்தனர். அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இன்றைக்கு, நாம் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறோம் என்னும் அந்த அத்தாட்சியைப் பெற்றிருக்கிறோம், நமது யோசுவா அந்த அத்தாட்சியை கொண்டு வந்தார். நமக்கு அவர் கொண்டு வந்த தேவனுடைய பரம ஈவை நாம் ருசிபார்த்தவர்களாய், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இதை கவனியுங்கள். எவ்வளவு அற்புதமானது! நீங்கள் ஒரு காலத்தில் எங்கிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள். குடிகாரர்கள்... 47இன்றைக்கு ஒரு சகோதரனை சந்தித்தேன்; ஒரு குறிப்பிட்ட தெரு வழியாக செல்ல வேண்டுமென்று எனக்கு ஒரு வினோதமான உணர்ச்சி தோன்றினது. அந்த மனிதனின் பெயர் எனக்கு மறந்துவிட்டது. ஒருக்கால் அவர் இந்த கூட்டத்தில் இருக்கலாம். அப்படி அவர் இல்லையென்றால், ஏன் தேவன் அவருக்கு நல்லவராயிருந்தாரே. அவர் ஒரு இந்தியன், அரை இந்தியர். அவர் விர்ஜினியாவைச் சேர்ந்தவர். பரிசுத்த ஆவி என்னிடம் காரணம் ஒன்றும் கூறாமலே, ''இந்த வழியாக போ, இந்த மூலையில் திரும்பு“ என்றார். நான் அங்கு சென்றேன், ஓ, அநேக முறை அது நிகழ்ந்துள்ளது. அவர், ''இங்கு காத்திரு'' என்றார். அங்கு சில நிமிடங்கள் காத்திருந்தேன். அவர், ''நீ திரும்பி இந்த வழியாகப் போ' என்றார். நான் அவ்வாறு செய்த போது, இவரைச் சந்தித்தேன். அவர், ''சகோ. பிரன்ஹாமே, உங்களை எனக்குத் தெரியும். ஒரு முறை உங்களைக் காண நான் ஜெபர்ஸன்வில்லுக்கு வந்திருந்தேன். நீங்கள் வெளிநாடு சென்றிருந்தீர்கள்'' என்றார். அவர் தமது வாழ்க்கையில் குடிகாரனாயிருந்தார். நான் என்ன செய்கிறேன் என்று அறியாமலே அவர் கையைப் பிடித்தேன். அவருடைய ஈரல் குடியினால் பாதிக்கப்பட்டிருந்தது. நான் அவர் கையைப் பிடித்து அங்கு நின்று கொண்டிருந்த போது, அந்த நாடித்துடிப்பு என்னை விட்டு அகன்றது. என்ன? அவர் சுகமடைந்தார். இந்த நகரத்தில், அந்த தெரு மூலையிலேயே. 48அந்த மனிதன் யாரென்று எனக்குத் தெரியாது... அவர் இங்குள்ளாரா? எனக்குத் தெரியவில்லை. அவர் இங்கிருப்பாரானால்... எனக்குத் தெரியவில்லை. அவர் வீடு திரும்ப வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார், அவர் போயிருப்பார் என்று நினைக்கிறேன். அவர் ஒரு இந்தியர், அவர் வெள்ளைக்கார பெண் ஒருத்தியை மணம் புரிந்துள்ளார். அவர் விர்ஜினியாவை சேர்ந்தவர். அவருடைய பெயர் எனக்கு மறந்துவிட்டது. அவர் இங்கு லோடி என்னுமிடத்தில் வசிக்கிறார் - அப்படி ஏதோ ஓரிடத்தில். அவர் அத்தனை தூரம் பயணம் செய்து ஜெபர்ஸன்வில்லுக்கு வந்தார். அவருக்கு அந்த தெரு மூலைக்கு நடக்க வேண்டுமென்று தோன்றினது. பரிசுத்த ஆவி என்னிடம், ''இந்த வழியாகப் போ'' என்றார். ஓ, தேவன் இரக்கமாயிருப்பாராக! பார்த்தீர்களா? அப்படிப்பட்ட காரியங்கள் நிகழ்வதை நான் கண்டதையும் அங்கு செய்யப்பட்டவைகளையும் நான் உங்களிடம் மணிக்கணக்காக எடுத்துரைக்க முடியும். ஏன்? நமது மகத்தான வீரராகிய இயேசு கடந்து சென்று, தேசத்தை வென்று, மரணத்தை வென்று, பாதாளத்தை வென்று, கல்லறையை வென்று, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து, “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்'' என்றார். அதோ திரைச்சீலையை இரண்டாக கிழித்து வெற்றி சிறந்தவர். அதோ அவர் நின்று கொண்டிருக்கிறார்! 49கறுப்பு நிறமுள்ள வயோதிப ஸ்திரீ ஒருத்தி போன்று. இங்குள்ள கறுப்பு நிறமுள்ள என் சகோதரர்களே, என்னை மன்னியுங்கள். அவள் ஒரு கூட்டத்தில் சாட்சி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுடைய பேச்சு தென்பாகப் பேச்சு போல் இருந்தது. அவள், ''நல்லது, இன்றிரவு உங்களிடம் ஒன்றை நான் கூறப் போகின்றேன். நான் இருக்க வேண்டிய விதமாக நிச்சயமாக இல்லை, நான் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறேனோ, நிச்சயமாக அப்படியும் இல்லை. ஆனால் ஒன்று மாத்திரம் நான் அறிவேன். நான் முன்பிருந்த விதமாக இப்பொழுது இல்லை'' என்றாள். அவள் எங்கோ ஓரிடத்திலிருந்து வந்திருந்தாள்! அது தான் என்று இன்றிரவு கூறுகிறேன்! ஒரு சமயம் நாம் பாவத்தின் காரணமாக இழக்கப்பட்ட நிலையில் இருந்தோம். ஆனால் இன்றைக்கோ, அந்த அத்தாட்சியை - திரும்பி வந்த அந்த வாக்குத்தத்தத்தை - ஏற்றுக் கொண்டதன் மூலமாய் (நமது நித்திய இரட்சிப்புக்கென அளிக்கப்பட்ட முன்தொகை), நாம் மரணத்திலிருந்து ஜீவனுக்கு எழுப்பப்பட்டு, அதை விட உயர்வான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க முழு தொகை நமக்கு செலுத்தப்பட்டு, நாம் நதியைக் கடந்து அந்த மகிமையான தேசத்துக்குள் பிரவேசித்தால் எப்படி யிருக்கும்? 50பெரிய சோதனை! ஆபிரகாம், இந்த அற்புதமான ஆசீர்வாதங்கள் அனைத்தும் பெற்றுக் கொண்ட பின்பு, சோதிக்கப்பட்டான், ஆபிரகாம் சோதிக்கப்பட்டான். அங்கு தான் ஜனங்கள் தவறிவிடுகின்றனர். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இதை இழந்து போகாதீர்கள். தேவனிடத் தில் வருகிற ஒவ்வொரு மகனும் சிட்சிக்கப்பட்டு, கடிந்து கொள்ளப்பட்டு, சாட்டையால் அடிக்கப்பட வேண்டுமென்றும், நாம் சிட்சையை சகிக்காமல் போனால், தேவனுடைய புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்போமென்றும் வேதம் போதிக்கிறது. சிட்சையை சகிக்காமல் போனால், நாம் பெற்றுள்ளதாக கூறிக் கொண்ட விசுவாசம், அது இருக்க வேண்டிய விதமாக இருக்கவில்லையென்பதை அது நிரூபிக்கிறது. நாம் இப்பொழுது உண்மையான கால்வீன் கொள்கையை அடைந்துள்ளோம். எனவே அதை நாம் கவனிக்க வேண்டும், இப்பொழுது கவனியுங்கள். தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு மகனும் சிட்சிக்கப்பட்டு கடிந்து கொள்ளப்பட வேண்டும். அவன் சாட்டையால் அடிக்கப்பட வேண்டும் என்னும் வார்த்தை, அவன் துண்டிக்கப்பட்டு, அவனில் காணப்படும் எல்லா கோட்பாடுகளும் அகற்றப்பட வேண்டும் என்னும் பொருளைத் தருகிறது. பாருங்கள், அவன் தேவனுடைய புத்திரனா என்று சோதிக்கப்பட வேண்டும். ஆபிரகாம் ஆசீர்வாதங்கள் அனைத்தும் பெற்ற பின்பு சோதிக்கப்பட்டான். 51நேரம் இன்றிரவு எங்கு சென்றுவிட்டது? நான் இன்னும் என் பொருளுக்கே வரவில்லை. அதற்குள்ளாக முடிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. எனக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் தருவீர்களா? (சபையோர் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). நன்றி, பயபக்தியாயிருங்கள். ஆபிரகாம். நோவாவைப் பாருங்கள். அதை நாம் சிறிது நேரம் பார்ப்போம். நாம் வேகமாக செல்ல முடியாது, அதற்கு அவசியமில்லை. என்னே, நாம் எதற்காக வேகமாக செல்லவேண்டும்? சிலர் அப்படி நின்று கொண்டு வேகமாக முடிப்பது எனக்கு பிடிக்காது. அவர் அதை எனக்களிக்கும் வரைக்கும் நான் காத்திருக்க வேண்டும். நோவாவைப் பாருங்கள். நாம் இன்று பெற்றுள்ள விஞ்ஞான உலகத்தைக் காட்டிலும் சிறந்த விஞ்ஞான உலகத்தின் மத்தியில் அவன் நூற்றிருபது ஆண்டுகள் பிரசங்கிக்கும்படி தேவன் செய்தார். நல்லது, நிச்சயமாக அவர்கள் கூர்நுனிக் கோபுரங்களைக் கட்டினார்கள், நம்மால் முடியவில்லை. அவர்கள் ஸ்திரீயின் முகமும் சிங்க உடலும் இறக்கைகளும் கொண்ட சின்னங்களை (Sphinx) கட்டினார்கள், நம்மால் முடியவில்லை. இன்று வரைக்கும் சவங்கள் இயற்கையாக காண வேண்டுமென்பதற்காக அவர்கள் அவைகளை பதப்படுத்தினர். இன்று நம்மால் அப்படி செய்ய முடியவில்லை. அவர்கள் தீட்டின சாயம் நாலாயிரம் ஆண்டுகள் கழிந்தும் மங்கிப் போகவில்லை. நம்மிடம் அப்படிப்பட்ட சாயங்கள் கிடையாது. அத்தகைய நாகரீகம் அக்காலத்தில் உண்டாயிருந்தது என்பதை அது காண்பிக்கிறது. இயேசு, ''நோவாவின் காலத்தில் நடந்தது போல'' என்றார். நோவா அத்தகைய விஞ்ஞான உலகில், ''மழை வானத்திலிருந்து பெய்யப் போகின்றது, ஏனெனில் தேவனுடைய வார்த்தை அவ்வாறு உரைக்கின்றது என்று பிரசங்கித்தான். நோவா ஒரு தீர்க்கதரிசி. 52தீர்க்கதரிசிகள் எழும்புவதை நீங்கள் காணும் போது, நீங்கள் கவனமாயிருப்பது நலம். ஏனெனில் நியாயத்தீர்ப்பு வந்து கொண்டிருக்கிறது. எனவே நோவா பிரசங்கித்துக் கொண்டு வந்தான், ஜனங்கள் அதை புறக்கணித்து அவனைக் கேலி செய்தனர். அவர்களில் சிலர், ''அது நம்முடைய விஞ்ஞானத்தின் அங்கீகாரம் பெறாது'' என்று கூறுவதை என்னால் கற்பனை செய்யமுடிகிறது. ஹ! இன்றும் அதுபோன்றே நடக்கிறதென்று நினைக்கிறேன். ''சத்தமிட்டு தேவனைத் துதித்தல், அழுதல் போன்றவைகளை இந்த உருளும் பரிசுத்தர் செய்கின்றனர். இவையாவும் உணர்ச்சிவசப்படுவதனால் உண்டானவையே'' என்கின்றனர். அது அவர்களுடைய விஞ்ஞானத்தின் அங்கீகாரத்தை பெறாது, ஆனால் தேவனுடைய வேதாகமத்தின் அங்கீகாரத்தை அது பெற்றுள்ளது. அதுதான் முக்கியம் வாய்ந்தது. கவனியுங்கள். விஞ்ஞானம் புறப்பட்டு வந்து, “ஆசாமிகளே, கேளுங்கள். உங்களுக்கு மூளை கோளாறு ஏற்பட்டுள்ளது. இங்கு பாருங்கள். எங்களிடம் 'ராடார்' (Radar) உள்ளது. எங்களால் விண்வெளிக் கோளை சந்திரனுக்கு அனுப்ப முடியும். இங்கும் அங்குமிடையே ஒரு துளி தண்ணீர் கூட கிடையாது. அப்படியிருக்க, அது எங்கிருந்து வரும்?'' என்று கூறுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. நோவா, “தேவன் அவ்வாறு கூறினார்! அவர் அப்படி கூறியிருப்பாரானால், அவர் யேகோவா - யீரே, அவரால் தண்ணீரை அங்கு உண்டாக்க முடியும். தேவன் அவ்வாறு கூறினார். எனவே என்னவாயினும், அது நிறைவேறியே தீரும்'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. யாரோ ஒருவர் கூறினார்... 53புற்றுநோயினால் மரித்துக் கொண்டிருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் வெறும் எலும்புக்கூடாக இருக்கிறார். ஆனால் அடுத்த ஆண்டு அவர் திடகாத்திரமும் ஆரோக்கியமுள்ளவராய் இருக்கிறார். அது எப்படி நடந்தது. அவர் கிடத்தப்பட்டிருந்தார். என்னிடம் அப்படிப்பட்ட நூற்றுக் கணக்கான சாட்சிகள் உள்ளன. ஒரு மனிதனுக்கு உயிர் போய்விட்டது. மருத்துவர், ''அவர் மரித்து பல மணி நேரம் ஆகிவிட்டது'' என்னும் வாக்குமூலத்தில் கையொப்பமிட்டார். தேவன் ஒரு தரிசனம் அருளினார், அவர் இப்பொழுது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எப்படி? என்னைக் கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது. தேவன், ''பிணியாளிகளை சொஸ்தமாக்குங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்“ என்று கட்டளையிட்டுள்ளார். அது உண்மை. நீங்கள் வியாதிப்பட்டு தேவன் உங்களுக்கு சுகமளிக்கும் போது, உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள். நீங்கள் சுகமடைந்துவிட்டதாக அவர் கூறட்டும். அவர் உங்களுக்கு தருவார். அது அவருக்கு சாட்சியாக அமையும். அவர், ''அது போய்விட்டது'' என்று கூறும் போது, “தேவனுக்கு ஸ்தோத்திரம்! மருத்துவரே, சிகிச்சை அளித்ததற்காக மிக்க நன்றி'' என்று சொல்லி வீட்டுக்குச் செல்லுங்கள், பாருங்கள். அது உண்மை. 54கவனியுங்கள். நோவா, ''உலகம் முழுவதும் மழை பெய்யப் போகிறது. பொல்லாதவர்களாகிய உங்களை வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விடும்'' என்றான். ''ஆ, மூடத்தனம். எங்களுக்கு எங்கள் சபைகள் உள்ளன. எங்கள் போதகர் அப்படியொன்றும் கூறவில்லையே. கிழவனுக்கு மூளை கோளாறு ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தான் அவன் அங்கு பேழையை செய்து கொண்டிருக்கிறான். இதை யாராகிலும் விசுவாசிப்பார்கள் என்று நினைக்கிறாயா?“ ஒரு நாள் தேவன், ''அவர்கள் உன்னைப் பரியாசம் செய்வதை நான் போதிய அளவுக்கு கேட்டுவிட்டேன். இப்பொழுது நான் ஆயத்தமாயிருக்கிறேன். உள்ளே போ!'' என்றார். இதோ மிருகங்கள் ஜோடி ஜோடியாக வருகின்றன, கிளி ஆணும் பெண்ணுமாக; சிட்டுக் குருவி, ஆணும் பெண்ணுமாக; வெள்ளாடு, ஆணும் பெண்ணுமாக; செம்மறியாடு, ஆணும் பெண்ணுமாக; பிறகு சிங்கம், புலி, மற்றும் உலகில் சுவாசமுள்ள அனைத்துமே ஜோடி ஜோடியாக பேழைக்குள் பிரவேசித்தன. நோவா, ''இதுவே உங்கள் கடைசி அடையாளம்“ என்றான். அவர்கள் அதை விசுவாசிக்க மறுத்தனர். உள்ளே போய், நாற்றமெடுக்கும் மிருகங்களுடன் கூட தங்கியிரு'' என்றனர். அதோ நோவா தேவனுக்குக் கீழ்ப்படிகிறான். உலகம் என்ன கூறின போதிலும், அவன் தேவனுக்கு செவி கொடுத்தான். அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் பேழைக்குள் பிரவேசித்தான், தேவன் பேழையின் கதவை அடைத்தார். 55நோவாவின் செய்தியை அங்கு உட்கார்ந்து கொண்டு கேட்டு, “பேழையில் ஒரு மரத்துண்டை இணைத்த எல்லைக்கோடு விசுவாசிகள்,” என்ன தெரியுமா, ஒருக்கால் கிழவன் கூறினது உண்மையாயிருக்க வகையுண்டு. நாம் அங்கு சென்று பேழையைச் சுற்றி நிற்போம். பேழையின் கதவு அடைப்பட்டவுடனே மழை பெய்யும் என்று கூறினானே. தேவன் அவனிடம், பேழையின் கதவை அவர் அடைக்கப் போவதாகவும் அப்பொழுது மழை பெய்யும் என்று அவர் கூறினதாகவும் நம்மிடம் கூறினான் அல்லவா? நாம் அங்கு சென்று அதை சுற்றி நிற்போம். மழை பெய்யத் தொடங்கினால், நாம் கதவை தட்டுவோம். அவன் இளகிய மனதுள்ளவன், எனவே கதவை திறந்துவிடுவான்'' என்றனர். பாருங்கள், சில சமயங்களில் நீங்கள் செய்தியை நோக்குவதற்கு பதிலாக, செய்தியாளனை நோக்குகின்றீர்கள். தேவன் கதவை அடைத்தார். நோவா எவ்வளவு தான் இளகியமனம் படைத்தவனாயிருந்த போதிலும், அடைக்கிறவரும் திறக்கிறவரும் தேவனே, அவர் விருப்பப்படி செய்யலாம். 56“சகோ. பிரன்ஹாமே, ஒரு மனிதன் இங்கு மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கு சென்று அவரைச் சுகப்படுத்தும். அப்பொழுது நாங்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொள்வோம்”, அது பிசாசு. அவர்கள் அவர் முகத்தின் மேல் கந்தை துணியிட்டு அவரைத் தலையில் அடித்து, “நீ தீர்க்கதரிசியானால், உன்னை அடித்தது யாரென்று சொல். நாங்கள் விசுவாசிப்போம்” என்று சொன்னதும் அவனே தான். அவர் யாருக்கும் வேடிக்கை காண்பிக்கமாட்டார். ''நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கற்களை அப்பங்களாக மாற்றும். அவரால் அப்படி செய்திருக்க முடியும். ஆனால் அவர் யாருக்கும் வேடிக்கை காண்பிப்பதில்லை. “நீ தேவனுடைய குமாரனேயானால், சிலுவையிலிருந்து இறங்கிவா.'' குருவானவர்கள் அப்படி கூறினார்கள், பாருங்கள். ஆனால் அவர் யாருக்கும் வேடிக்கை காண்பிக்கவில்லை. பிதாவானவர் அவருக்கு காண்பித்ததை மாத்திரமே அவர் செய்தார், அவர் வேறொன்றையும் செய்யவில்லை. அப்படித்தான் அவர் கூறினார். பரி. யோவான் 5:19, “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்.'' பார்த்தீர்களா? 57கவனியுங்கள். “மழை பெய்யத் துவங்கினால், நாம் சென்று பேழையைச் சுற்றி நின்று கொள்வோம்.'' நோவா இவ்வாறு கூறியிருப்பான் என்று எண்ணுகிறேன்... அவன் முதல் தட்டில் பிரவேசித்து, அங்கிருந்து அடுத்த தட்டிற்கு (பறவைகள் வைக்கப்பட்டதட்டிற்கு) ஏறினான் - ஊரும் பிராணிகளிலிருந்து அடுத்த உத்தியோகத்துக்கு. நீதிமானாக்கப்படுதலிலிருந்து பரிசுத்தமாக்கப்படுதல் (பறவைகள்), அங்கிருந்து அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கு சென்றான். அது தான் பேழையின் ஜன்னல், அதன் வழியாக வெளிச்சம் உள்ளே பிரவேசித்தது. “நான் உன்னதங்களுக்கு ஏறி, அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். சரி, குடும்பத்தினரே, காலையில் என்னுடன் கூட பேழைக்குள் பிரவேசித்தவர்களே... தாமதமாகிக் கொண்டிருக்கிறது, இப்பொழுது முழு பிற்பகல் நேரம் வந்துவிட்டது. தேவன் பேழையின் கதவை அடைத்துவிட்டார். காலையில் பூமி முழுவதும் மழை பெய்து , பேழை மிதக்கத் தொடங்கும். தேவன் செய்தியை அவிசுவாசித்த அந்த கொடூரப் பாவிகள் ஒவ்வொருவரையும் நிர்மூலமாக்குவார்,'' என்று நோவா கூறியிருப்பான். அவர்கள் எல்லோரும் மழைக்காக காத்திருந்தனர். 58அடுத்த நாள் காலை அவன் எழுந்து வெளியே எட்டிப் பார்த்த போது, அது அழகும் பிரகாசமுமான நாளாயிருந்தது. அவன் பேழைக்குள் பிரவேசித்தது எந்த நாள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? மே மாதம் 17ம் தேதி. அப்பொழுது நோவாவுக்கு அறுநூறு வயது. அப்படித்தான் வேதம் கூறுகிறது. அவன் பேழைக்குள் பிரவேசித்தான், 17ம் தேதி கடந்தது. சூரியன் எப்பொழுதும் போல் வெப்பமாக பிரகாசித்தது. அப்பொழுது எல்லைக்கோடு விசுவாசிகள், “ஆ நான் சொன்னேன் அல்லவா, அதெல்லாம் ஒன்றுமில்லை. அங்கு ஏன் இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறாய்? அந்த போலியை விட்டு வா” என்று கூறுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ''அவர் கூறினது சரியென்று நம்புகிறேன்.“ பாருங்கள், விசுவாசத்துக்கும் அவிசுவாசத்துக்குமிடையே ஒரு பிரிவினைக்கோடு வரையப்பட்டுள்ளது. ஒன்று நீங்கள் ஒரு பக்கத்துக்கு வரவேண்டும், அல்லது மறு பாகத்துக்கு செல்ல வேண்டும். உங்கள் கடைசி அழைப்பை பெறும் ஒரு நேரம் உண்டாயிருக்கும். எனவே, இரண்டாம் நாள், தேவன் உலகத்தை அழிக்கப் போகிறார் என்று அவர்களிடம் கூறினது நிறைவேறாமல் போனது, நோவாவுக்கும் அவனுடைய சபையோருக்கும் எப்படிப்பட்ட ஏமாற்றமாய் இருந்திருக்கும்? அவன் பேழையினுள் எத்தனை நாட்கள் உட்கார்ந்து கொண்டு காலம் கழித்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏழு நாட்கள், ஒன்றும் நடக்கவில்லை. சோதிக்கப்படுதல்! 59பின்பு எட்டாம் நாளில் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது, பெரிய துளிகள் வானத்திலிருந்து விழத் தொடங்கின, மழை அதிகமாக பெய்து வெள்ளம் புரண்டது, ஊற்றுகள் உடைந்தன, தெருக்கள் தண்ணீரினால் நிறைந்தன. ஜனங்கள் பேழையின் கதவைத் தட்டினர், நோவாவினால் அந்த சத்தத்தைக் கேட்கவும் கூட முடியவில்லை. பேழை மிகவும் உயரமாக மலைக்கும் மேலே மிதந்தது. பேழைக்குள் இல்லாத அனைவரும் அழிந்தனர். நோவா பேழையின் ஜன்னலின் வழியாய் வெளியே வந்து விடுவானோ என்று தேவன் அவனை சோதித்துப் பார்த்தார். அவர் அந்த வாக்குத்தத்தம் செய்த பிறகு, அது நிறைவேறுமளவும் நோவா பேழைக்குள் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தான். அதுதான் நீங்கள் ஒரு வாக்குத்தத்தத்தைப் பெற்று, அது வாக்குத்தத்தம் என்று நீங்கள் அறிந்திருந்தால், அதில் நிலைத்திருங்கள் ஆபிரகாம் சோதிக்கப்பட வேண்டியிருந்தது. வாக்குத்தத்தத்தில் நிலைத்திருங்கள்! ஆபிரகாமும் சாராளும் கடைசி அடையாளத்தை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு அவர்கள் சரீரங்கள் மாறின. உடனே சிறு ஈசாக்கு காட்சியில் தோன்றினான், அழகான யூத சிறுவன். எட்டாம் நாளில் விருத்தசேதனம் பண்ணப்பட்ட பிறகு, நூறு வயதான அந்த இளம் தாய்... ஆபிரகாமுக்கு நூறு வயதும், அவளுக்கு தொண்ணூறு வயதும்; இருவரும் இருபது வயதுள்ளவர்களாய் எவ்வாறு மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை செய்யமுடிகிறது. இந்த சிறு குழந்தை, எவ்வளவு அழகாயிருந்தான்! 60உங்களுக்குத் தெரியுமா, தேவன் ''வரப்போகும் நாட்களிலுள்ள ஜனங்கள் (ஆபிரகாமின் சந்ததியார்) - உன் சந்ததியார் -என் வார்த்தையில் நிலைத்திருக்கும் எந்த மனிதனுக்கும் என் வாக்குத்தத்தை நிறைவேற்றுவேன்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனையைக் கொடுப்பேன் என்று அறியக்கடவர்கள்'' என்றார். அந்த சிறுவனுக்கு பதினான்கு வயதான போது, அவனுக்கு அடர்த்தியான தலைமயிரும் அழகிய கண்களும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவனுடைய தந்தைக்கும் தாய்க்கும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்! நீங்கள் ஒரே பிள்ளையாயிருந்தால், உங்கள் பெற்றோர் உங்கள் பேரில் எவ்வளவு ஆவல் கொண்டிருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். பின்பு தேவன் ஆபிரகாமுக்கு கட்டளையிட்டார்... அவன் அதை சாராளிடம் சொல்லவில்லை, ஏனெனில் சாராள் பலவீனமான பாண்டம். தேவன், ''ஆபிரகாமே, நான் உனக்களித்த அந்த சிறுவனை அவன் மூலம் உன்னை அநேக ஜாதிகளுக்கு தகப்பனாக்குவேன் என்று நான் உன்னிடம் கூறின அவனை இன்றிரவு நான் உனக்கு அளிக்கும் தரிசனத்தில் நீ காணப்போகும் மலைக்கு கொண்டு சென்று அவனை அங்கு பலி செலுத்த வேண்டும் என்றார். அவன் அநேக ஜாதிகளுக்கு தகப்பனாவான் என்னும் வாக்குத்தத்தத்தை தேவன் நிறைவேற்றுவதற்கான அந்த ஒரு நம்பிக்கையும் அவன் அழித்துப்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்காக அவன் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தான் - அவனுக்கு நூறு வயதாகும் வரைக்கும்; நூற்று பதினான்கு வயதாகும் வரைக்கும் “இதோ அந்த சிறுவன் இருக்கிறான், என் வார்த்தையை நிறைவேற்றுவேன் என்பதற்கு அந்த ஒரு அத்தாட்சி மாத்திரமே உன்னிடம் உள்ளது. அதை மலையின் மேல் கொண்டு சென்று அழித்துப்போடு. அப்பொழுது இந்த பிள்ளையின் மூலம் உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன்'' 61ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக் கொண்டான். தேவன் அவ்வாறு வாக்களித்திருந்தால், அவனை மாரித்தோரிலிருந்து எழுப்ப அவர் வல்லவராயிருக்கிறாரென்று அறிந்திருந்தான். நாம் என்ன ஆபிரகாமின் சந்ததியாரா? ஒரு சிறு வேதப் பிரகாரமான பிழை தோன்றும் போது, மற்ற ஆண்களின் பெண்களின் மத்தியில் பிரபலமாயிருக்கக் கருதி, வார்த்தையில் நிலை நிற்பதற்குப் பதிலாக நீங்கள் அதன் பின்னே சென்றுவிடுகிறீர்கள். அவமானம் ஒரு பெரிய ஸ்தாபனம் தேவனுடைய பார்வையில் எவ்வாறுள்ளது? அவர் அதை அப்படி அழித்து விடுவார் (சகோ. பிரன்ஹாம் விரலைச் சொடுக்குகிறார் - ஆசி). அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட முதற்கு, அவர் ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றிலிருந்து விலகியிருக்கிறார். அந்த ஸ்தாபனங்களிலுள்ள தனிப்பட்ட நபர்களிடமிருந்து அல்ல, அந்த ஸ்தாபன முறைமையிலிருந்து அது தேவனுக்கு விரோதமாயுள்ளது. ஸ்தாபனமாயுள்ள ஒவ்வொரு சபையும் கத்தோலிக்க ஸ்தாபனத்திற்கு குமாரத்தியாயுள்ளது என்று வேதம் கூறுகின்றது. வெளிப்படுத்தல்: 17, “வேசியும் அவளுடைய வேசி குமாரத்திகளும்''. முற்றிலும் உண்மை. 62இப்பொழுது அவள் நமது தேசத்தின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஜனநாயகக் கட்சிக்காரராகிய உங்களுக்கு அவமானம், உங்கள் பிறப்புரிமையை நீங்கள் விற்றுப்போட்டீர்கள்! சரி, இதை இங்கு நிறுத்திக்கொண்டு, இதற்கு மீண்டும் வருவோம். கவனியுங்கள், எனக்கு நேரம் கடந்து சென்று கொண்டேயிருக்கிறது. உங்கள் அரசியலைக் காட்டிலும் உங்கள் கிறிஸ்து உங்களுக்கு முக்கியம் வாய்ந்தவர் அல்லவா? ஆபிரகாம் லிங்கன் அப்பொழுது கூறினதை நீங்கள் செய்ய வேண்டும். சரி, கவனியுங்கள். நாம் தொடர்ந்து செல்வோம். தேவன், ''இந்த பிள்ளையாண்டானை மலையின் மேல் கொண்டு போ“ என்று கூறினார். ஆபிரகாம் ஒரு வாலிபனா இல்லையா என்று நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? அவன் பிள்ளையாண்டானைக் கூட்டிக்கொண்டு, விறகு கட்டைகளுடனும் வேலையாட்களுடனும் கழுதையின் மேல் மூன்று நாட்கள் பிரயாணம் சென்றான். எந்த ஒரு சாதாரண மனிதனும்... நான் காட்டு அதிகாரியாக இருந்தபோது, மின்சாரக் கம்பிகளைக் காவல் காக்க நடப்பது வழக்கம். நான் எளிதில் ஒரு நாளில் 30 மைல் நடப்பேன், நமக்கு பெட்ரோல் கால்கள் உண்டு, அப்படிதான் நாம் அதை அழைக்கிறோம். ஆனால் அவர்களோ நடந்து அல்லது கழுதையின் மேல் சவாரி செய்து பயணம் செய்ய வேண்டும். அவர்கள் மெல்ல போகக் கூடிய சிறு கழுதையின் மேல் அங்கு பயணம் செய்தனர். நாம் அதைவிட வேகமாக நடந்து விடுவோம். இதோ அவன் அவ்வாறு மூன்று நாட்கள் பயணம் செய்து, தன் கண்களை ஏறெடுத்து தூரத்திலுள்ள மலையைக் கண்டான். அப்பொழுதும் அவன் வனாந்தரத்தில், ஜனசஞ்சாரமுள்ள இடத்திலிருந்து நூறு மைல் தொலைவில் இருந்திருப்பான். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். 63அவன் விறகு கட்டைகளை ஈசாக்கின் முதுகில் ஏற்றினான்; அநேக ஆண்டுகளுக்குப் பின்பு தேவனுடைய குமாரன் சிலுவையை சுமந்ததற்கு அது முன்னடையாளமாயிருந்தது. ஈசாக்கு, தான் எதன் மேல் பலியாக கிடத்தப்படப் போகின்றானோ, அதே கட்டையை சுமந்து மலையின் மேலேறினான் - இயேசுவுக்கு முன்னடையாளம். தேவன் ஒரு புள்ளி கூட பிசகாமல் அதை அப்படியே முன்னடையாளமாகத் தருவாரனால்; லோத்தின் மனைவியே, உலகத்தின் காரியங்களை நீ பின்னிட்டுப் பாராதே. இந்த முன்னடையாளங்கள், நிழல்கள் அனைத்தும் பிழையின்றி அமைந்துள்ளன. பாருங்கள்? ஏவாளை நினைத்துப் பாருங்கள், லோத்தின் மனைவியை நினைத்துப் பாருங்கள். மனிதர்களே, லோத்தையே நினைத்துப் பாருங்கள்; ஆதாம் தன் மனைவிக்கு விட்டுக் கொடுப்பதை நினைத்துப் பாருங்கள். லோத்தும் அவ்வாறே இருந்தான். ஜாக்கிரதையாயிருங்கள். சகோதரன் என்னும் முறையில் நான் உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. சிறு ஈசாக்கு மலையின் மேலேறிச் செல்வதை கவனியுங்கள். அவனுக்கு சந்தேகம் தோன்றினது. அவன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, ''என் தகப்பனே'' என்றான். ஆபிரகாம், “என் மகனே, இதோ இருக்கிறேன்'' என்றான். ஈசாக்கு, “இதோ, கட்டை இருக்கிறது. இங்கு எல்லாம் இருக்கிறது, நெருப்பும் கூட, தகன பலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே ?'' என்றான். அந்த தகப்பனுக்கு, குரலில் எவ்வித நடுக்கமும் ஏற்படாமல், “என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பார்த்துக்கொள்வார்'' என்று சொல்வதைக் கேளுங்கள். அவனுடைய ஒரே மகன் கொல்லப்படுவதற்காக கொண்டு செல்லப்படுகிறான், ஆயினும் அந்த விசுவாசமுள்ள இருதயம் தேவன் பொய்யுரைக்க மாட்டார் என்பதை அறிந்திருந்தது. அப்படித்தான் இன்றைய ஆபிரகாமின் சந்ததியாரும் செய்வார்கள், ''சகோ. பிரன்ஹாமே, அது எப்படி முடியும்?'' தேவன் தமக்காக பார்த்துக் கொள்வார். ''அவர் எப்படி அதைச் செய்வார்?'' எனக்குத் தெரியாது. ஆனால் அவர் யேகோவா- யீரே. 64அவன் மலையின் உச்சிக்கு சென்று கல்லை உருட்டினான். அந்தக் கல்லின் மேல் கட்டைகளை அடுக்கி நெருப்பு மூட்டினான். அவன் ''என் மகன் ஈசாக்கே, இப்படித் திரும்பு“ என்றான். அவனுடைய இடுப்பிலிருந்த கயிற்றை அவிழ்த்து ஈசாக்கின் கைகளையும் கால்களையும் கட்டினான். ஈசாக்கு கிறிஸ்துவைப் போல் கீழ்ப்படிந்து தன்னை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தான். அவனை ஆபிரகாம் கட்டைகளின் மேல் கிடத்தினான். அவன் தன் உறையிலிருந்து பெரிய கத்தியை உருவி, வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே, அதை சில முறை தீட்டினான். அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், விசுவாசத்தில் வல்லவனாகி, மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக் கொண்டான் என்று அறிந்தவனாய், அவன் அப்படி செய்ய வேண்டுமென்று தேவன் கூறினாறானால், அவனை மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பினான். அது ஆபிரகாம், அது அவனுக்குப் பின்வரும் சந்ததி. மாம்சப்பிரகாரமான சந்ததியே இப்படியென்றால், ராஜரீக சந்ததி எப்படியிருக்கும்? சந்தேகத்தினால் தடுமாறுவதல்ல! தேவன் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்பதை அவன் அறிந்தவனாய், அதை முழு நிச்சயமாக நம்பினான். 65அவன் கத்தியைத் தீட்டினான்; சிறுவன் ஈசாக்கின் கருமை நிறக்கண்கள், அந்த பெரிய கூர்மையான கத்தியை தீட்டப்படும் போது கல்லின் மேல் இங்கும் அங்கும் செல்வதை கவனித்துக் கொண்டிருந்தன. அவன் திரும்ப படுத்துக் கொண்டான். அவன் முகத்தின் மேல் விழுந்திருந்த சுருண்ட மயிரை பின்னால் தள்ளிக் கொண்டான், தன் சிறு தாடையை பின்னால் இழுத்துக் கொண்டான். ஆபிரகாம் எழுந்து நின்றான். ஈசாக்கின் கன்னங்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. ஆபிரகாம் நன்கு அறிந்தவனாய், தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல் அதை முழு நிச்சயத்தோடு நம்பினான். அவன் தன் சொந்த மகனின் தொண்டையில் கத்தியைப் பாய்ச்சுவதற்காக கையைத் தூக்கினான். அவன் அப்படி செய்த போது, தேவனுடைய சத்தம் அவனைக் கூப்பிட்டு, அவனுடைய கையை பிடித்துக் கொண்டது. அவர், ''ஆபிரகாமே, ஆபிரகாமே, உன் கையைப் போடாதே! நீ என்னை நேசிக்கிறாய் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்'' என்றார். அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஆபிரகாமுக்கு பின்வரும் சந்ததிக்கு ஒரு சாட்சி கொடுத்துக் கொண்டிருந்தார். ''உன் கையைப் போடாதே, பிள்ளையாண்டானுக்கு ஒரு கெடுதியும் செய்யாதே! நீ என்னை நேசிக்கிறாய் என்று அறிந்திருக்கிறேன்.'' 66அதே நேரத்தில், ஆபிரகாம் தனக்குப் பின்னால் ஏதோ ஒன்று சத்தமிடுவதை கேட்டான். அவன் பார்த்தபோது, அங்கு புதரில் தன் கொம்புகள் சிக்கிக் கொண்டிருக்கிற ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான் (அது ஆண் ஆடு). ஆபிரகாம் சென்று அதைப் பிடித்துக் கொண்டு வந்து, அவனுடைய மகனுக்குப் பதிலாக அதை பலியிட்டான். அந்த ஆட்டுக்கடா எங்கிருந்து வந்தது? ஜன சஞ்சாரத்திலிருந்து ஆபிரகாம் நூறு மைல் தொலைவில் இருந்தானே! அது முன்னமே அங்கிருந்தால், காட்டு மிருகங்கள் அதைக் கொன்று போட்டிருக்கும். அது வீட்டு மிருகம். அது எங்கிருந்து வந்தது? மேலும் அது மலையின் உச்சியில் இருந்தது? அங்கு புல்லோ தண்ணீரோ கிடையாது. ஆட்டுக்கடா காணப்பட்ட இடத்துக்கு சுற்றிலுமிருந்த இடங்களில் தான் ஆபிரகாம் கற்களைப் பொறுக்கி பலிபீடத்தை உண்டாக்கினான். அப்படியானால் அது எங்கிருந்து வந்தது? அது தரிசனம் அல்ல; அதிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தரிசனம் இரத்தம் வடியாது. அல்லேலூயா! யேகோவா - யீரே தமக்காக ஒரு பலியை அருளினார்! 67தேவனுடைய வார்த்தையை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போது, அவர் நமது தேவைகள் அனைத்தும் அருளிச் செய்ய வல்லவராயிருக்கிறார். தேவன், யேகோவா - யீரே இன்றிரவும் யேகோவா - யீரோவாக இருக்கிறார். அவர் ஏற்கெனவே ஒரு பலியை அருளிவிட்டார். அவர் ஒரு சபையை அருளியிருக்கிறார். அவர் ஒரு செய்தியாளனை அருளியிருக்கிறார் - பரிசுத்த ஆவி. அவர் இப்பொழுது இங்கிருக்கிறார் - யேகோவா யீரே! கர்த்தர் தமக்காக ஒரு வேதம், ஒரு ஆவி, ஒரு சபை, ஒரு செய்தி, ஒரு செய்தியாளன் இவையனைத்தும் அருளியிருக்கிறார். சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டு வீடு செல்வதற்கான நேரம் இப்பொழுது இங்குள்ளது. இந்த சபையை இவ்வுலகினின்று எடுத்து, நமது பலவீனமான சரீரங்களை மறுரூபப்படுத்தி அவைகளை மகிமைக்கு கொண்டு செல்ல அவசியமாயுள்ள எல்லாவற்றையும் யேகோவா - யீரே தந்தருளுவார். யேகோவா - யீரே! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில், இப்படிப்பட்ட ஒன்று எவ்வாறு சம்பவிக்கும்? 68அண்மையில் நானும் என் மகன் பில்லியும் இந்தியாவுக்குச் சென்றிருந்தோம். நான் ஒரு செய்தித் தாளை கையிலெடுத்தேன்... நான் கப்பலை விட்டு இறங்கினபோது, அங்கு ஆயிரக்கணக்கானோர் அரண்மனை காவலருடன் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் தாஜ் ஓட்டலுக்கு சென்றோம். அங்கு ஆங்கில செய்தித்தாள் ஒன்றை வைத்திருந்தனர். அதில் ஒரு பெரிய செய்தி அச்சடிக்கப்பட்டிருந்தது. அது ''பூமியதிர்ச்சி ஓய்ந்துவிட்டது என்பதற்கு அது அடையாளமாயிருக்க வேண்டும்“ என்று கூறினது. என்ன விஷயம்? அந்த பெரிய பூமியதிர்ச்சியைக் குறித்து நீங்கள் படித்திருப்பீர்கள், அது உண்டாவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பே, கற்பாறைகளில் தங்கியிருந்த சிறு பறவைகள் அனைத்தும்... அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் உள்ளது போல் இந்தியாவில் சுவர்கள் கிடையாது. அவர்கள் கற்பாறைகளைப் பொறுக்கி அவைகளைக் கொண்டு சுவர்கள் அமைத்துக் கொள்கின்றனர். சிறு பறவைகள் இந்த கற்பாறைகளில் கூடுகள் கட்டி வாழ்கின்றன. அவர்கள் கட்டியுள்ள உயரமான கோபுரங்களில் அவை கூடு கட்டி வாழ்கின்றன. பூமியதிர்ச்சி உண்டாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்த சிறு பறவைகள் அந்த கற்சுவர்களிலிருந்து பறந்து சென்றுவிட்டன. மாலை நேரத்தில்... நடுப் பகலில் வெப்பம் அதிகமாகும் போது, தங்களை வெயிலிலிருந்து காத்துக் கொள்ள ஆடு மாடுகள் இந்த சுவர்களின் நிழலில் வந்து நிற்பது வழக்கம். ஆனால் இரண்டு நாட்களாக ஆடுமாடுகள் சுவர்களண்டை வரவேயில்லை. அவை வயலின் நடுவில் நின்று, செளகரியத்திற்காக ஒன்றின் மேல் ஒன்று சாய்ந்து கொண்டிருந்தன. பிறகு பூமியதிர்ச்சி உண்டாகி, அந்த சுவர்களைக் கீழே தள்ளிவிட்டது. பூமியதிர்ச்சி ஓய்ந்தவுடன், பறவைகள் திரும்பி வந்தன. ஆடு மாடுகள் வயலிலிருந்து திரும்பி வந்தன. அது என்ன? ஆடுகளையும் மாடுகளையும், பறவைகளையும் பேழைக்குள் அழைத்த தேவன், இன்றும் மாறாதவராக இருந்து, தமது மிருகங்களை ஆபத்திலிருந்து தப்ப வெளியே அழைக்க முடியும். 69அவர் உள்ளுணர்வின் மூலம் ஒரு மிருகத்தை வழி நடத்த முடியுமானால், தேவனுடைய சபையானது மனிதனால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபன உபதேசங்கள் என்னும் சுவர்களிலிருந்து எவ்வளவு அதிகம் அகன்று செல்ல வேண்டியதாயுள்ளது? இந்நாட்களில் ஒன்றில் பாபிலோன் விழப் போகின்றது. யேகோவா - யீரே தமக்காக உங்களுக்கு ஒரு இளைப்பாறும் இடத்தை அருளியிருக்கிறார். உலகம் என்னும் கோபுரத்திலிருந்து பறந்து செல்லுங்கள்! ஹாலிவுட்டின் பகட்டிலிருந்து பறந்து செல்லுங்கள் சபைகள் அதை பாவனை செய்து பிரகாசிக்க முயன்று கொண்டிருக்கின்றன. சுவிசேஷம் பிரகாசிப்பதில்லை, ஹாலிவுட் பிரகாசிக்கின்றது (shine); சுவிசேஷம் ஜொலிக்கின்றது (glows). ஆனால் ஹாலிவுட்டோ பகட்டினால் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. பெரிய சபை கல்வியினால் பிரகாசிக்கின்றது. ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபையோ தாழ்மை, இனிமை, பரிசுத்த ஆவி ஆகியவைகளினால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. பிரகாசம், ஜொலித்தல் இவையிரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. 70அவர் இப்பொழுது இங்கிருக்கிறார். யேகோவா - யீரே தமக்காக அருளியிருக்கிறார். ''தேவன் இந்த கற்களினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்'' ஸ்தாபனங்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல் போனால், தேவன் பிள்ளைகளை தெருக்களிலிருந்தும், வேசி மடத்திலிருந்து வேசிகளையும் கொண்டு வர முடியும். அவருக்கு விருப்பமான எதையும் அவரால் உண்டு பண்ண முடியும். ஆனால் தேவன் ஒரு செய்தியை அளித்திருப்பாரானால், அதை ஏற்றுக் கொள்ள யாராகிலும் எங்காகிலும் இருப்பார்கள். யேகோவா - யீரே! தேவன் தமக்காக ஒரு செய்தியை அருளுவார். தேவன் தமக்காக ஒரு செய்தியாளனை அருளுவார். தேவன் தமக்காக, தமது சொந்த வழியில், சபைக்கு அடையாளங்களை அருளுவார்; அதில் சேருவதல்ல, உங்கள் பெயர்களை புத்தகத்தில் பதிவு செய்து கொள்வதல்ல. இன்றைக்கு தீர்மானங்கள் செய்யப்படுவதைக் குறித்து நாம் அதிகம் கேள்விப்படுகிறோம் - அநேக தீர்மானங்கள். கற்பாறைகளை வெட்டி அவைகளை தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக உருவாக்க கல் சிற்பி இல்லாமல் போனால், கற்பாறைகளை குவியலாகக் குவிப்பதனால் என்ன பயன்? ஜனங்களை தேவனுடைய இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தினால் வெட்டி அவர்களை உண்மையுள்ள தேவனுடைய பிள்ளைகளாக உருவாக்க ஒருவர் இல்லாமல், அவர்களை ஆயிரக்கணக்கில் பெரிய ஸ்தாபனங்களில் குவிப்பதனால் என்ன பயன்? அவர்கள் எங்கேயிருக்கிறார்களோ, அங்கேயே அவர்களை விட்டு விடுவது நலம். ஆமென். தேவன் (மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, கத்தோலிக்கர் அல்ல) தேவனுடைய பிள்ளைகளை, தேவனுடைய புத்திரரை உருவாக்குவதற்கென தமக்காக ஒரு கத்தியை அருளியிருக்கிறார். ஆமென். யேகோவா- யீரே “கர்த்தர் தமக்காக பார்த்துக் கொள்வார். அவர் அப்படி செய்திருக்கிறார். அவரை விசுவாசித்து வாழுங்கள். 71சற்று நேரம் நாம் தலை வணங்குவோம். கிருபையுள்ள தேவனே, என்றென்றைக்கும் ஜீவிக்கிற தேவனே, எங்கள் மேல் இரக்கம் பாராட்டி, உமது கிருபையை எங்களுக்கு அருளும். பிதாவே, நீர் எங்களுக்கு செய்ய நினைத்துள்ள எதற்கும் நாங்கள் அபாத்திரர். நாங்கள் தகுதியுள்ளவர்கள் என்று அறிக்கை செய்யவில்லை, நாங்கள் தேவனிடத்திலிருந்து வந்த அழைப்புக்கு செவி கொடுக்க மாத்திரம் செய்கிறோம். பிதாவே, கர்த்தராகிய இயேசு தமது ஆலயத்துக்கு வரவிருக்கும் தமது மகத்தான வருகையின் போது, நாங்கள் தேவனுடைய ஆலயத்தில் இசைவாக பொருத்தப்பட்டிருக்க எங்களை இன்றிரவு அதற்கேற்ற கற்களாக வெட்டி உருவாக்குமாறு தேவனை வேண்டிக் கொள்கிறோம். பிதாவே, இதை அருளும். பாவிகளாகிய எங்களுடைய குறைகளை மன்னியும். உமது வார்த்தையை எங்களுக்கு வெளிப்படுத்தித் தாரும். நாங்கள் நடக்க வேண்டிய வழியை எங்களுக்கு காண்பியும் . ஓ பிதாவாகிய தேவனே நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளட்டும். அது வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், அது தவறான போதகரென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். பரிசுத்த ஆவியே எங்கள் போதகர், அவரே வார்த்தையை எழுதியவர். அவர் வார்த்தையைத் தவிர வேறொன்றையும் போதிக்கமாட்டார். அதை அவர் இன்றிரவு எங்களுக்கு எங்கள் இருதயத்தில் வெளிப்படுத்தித் தரவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். தேவனே, அதை அருளும். 72இப்பொழுது நமது தலைகள் வணங்கி, கண்கள் மூடியிருக்கும்போது தேவனுடைய கிருபை இதன் மேல் தங்கியிருப்பதாக என்பதே என் தாழ்மையும் உத்தமுமுள்ள விண்ணப்பமாயுள்ளது. இப்பொழுது விசுவாசியுங்கள், சந்தேகப்படாதீர்கள். இந்த கட்டிடத்தில் யாராகிலும் ஆண்களும் பெண்களும் - அவரை அறியாமல், அவர் அருளியுள்ள பலியாகிய கர்த்தராகிய இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்களா?. அப்படிப்பட்டவர்கள் இக்கட்டிடத்தில் இருக்கிறார்களென்று நானறிவேன். அவரை அறியாமலிருக்கிறீர்களா? அவரை அறிந்துள்ளதாக உங்கள் அறிவுத்திறன் கொண்டு எண்ணக் கூடும். ஆனால் ஒருவன் மறுபடியும் பிறந்தாலொழிய தேவனைக் காண முடியாது. பார்த்தல் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால்... நீங்கள் உங்கள் கண்களினால் காண்பது மாத்திரமல்ல, அது என்னவென்று கண்டு புரிந்து கொள்ள வேண்டும். “பார்த்தல் என்றால் புரிந்து கொள்ளுதல்” என்று பொருள். நீங்கள் நேராக அதைக் கண்டு, “என்னால் காண முடியவில்லையே'' என்கிறீர்கள். அதாவது, ”என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை'' என்னும் அர்த்தத்தில் கூறுகின்றீர்கள். நீங்கள் மறுபடியும் பிறந்தாலொழிய, நாங்கள் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று உங்களால் புரிந்து கொள்ள இயலாது. உங்களுக்கு அந்த அனுபவம் இதுவரை இல்லாமலிருக்கிறதா? உங்கள் தலைகள் வணங்கி, கண்கள் மூடியிருக்கும் இந்நேரத்தில், உங்கள் கைகளையுயர்த்தி, “சகோ. பிரன்ஹாமே, இன்றிரவு ஜெபத்தில் என்னை நினைவு கூருங்கள். நமது கடைசி செய்தியை நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். நாட்கள் வேகமாக கடந்து செல்கின்றன. வேதத்தில் நீர் கூறியுள்ளது உண்மையென்று காண்கிறேன். நான் வேதத்தை படித்திருக்கிறேன். நீர் வர வேண்டிய நேரம் இதுவே என்று விசுவாசிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் கிறிஸ்துவுக்காக இப்பொழுது என் உறுதியை தெரிவிக்கிறேன்” என்று கூறுவீர்களா? 73தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னையும். நல்லது. மாடியின் முன் பக்கத்தில், கரங்கள்! உங்கள் கையையுயர்த்தி, யோசுவா கூறின வண்ணமாக, ''நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்“ என்று கூறுங்கள். சரி, வேறு யாராகிலும். நான் காத்திருக்கிறேன், பின்னால் உள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. உன் கையை நான் காண்கிறேன். மேலே உள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அவர் உன்னை காண்கிறார். மேலே மாடியின் முன் பக்கத்திலுள்ள உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக, ஐயா. இது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் புரிந்த மிகப் பெரிய செயல். உட்பாதையின் நடுவிலுள்ள யாராகிலும் மேலே யாராகிலும் ஒருக்கால் கையுயர்த்தக் கூடும். அங்கு உயர்த்தப்பட்ட கரம் ஒன்றையும் நான் காணவில்லை. ஒருக்கால்... உட்பாதையில் நடுவில் யாராகிலும்? மேலே யாராகிலும்? உங்கள் கையையுயர்த்தி, ''சகோ. பிரன்ஹாமே, எனக்கு... நான் அவரை சேவிக்க விரும்புகிறேன். நான் உத்தமமாய்க் கூறுகிறேன்'' என்று சொல்லுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அந்த குட்டையான மனிதனை தேவன் ஆசீர்வதிப்பாராக. மாடியின் முன்பக்கத்தில் வலது பாகத்தில் யாராகிலும் கையுயர்த்தி, சகோ. பிரன்ஹாமே, அது உண்மையென்று அறிவேன். நான்... நான் தேவனை அறியாதவன். அவரை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நான் நிச்சயமாக அவரை அறிய விரும்புகிறேன். நான் தருணத்தை இழக்க விரும்பவில்லை. ஒருக்கால் நான் திரும்பி வராமலிருக்கக் கூடும்'' என்று சொல்லுங்கள். 74''மரம் எந்த பக்கம் சாய்கிறதோ அந்த பக்கமே விழும் என்று வேதவசனம் உரைக்கிறது. தவறான வழியுள்ள திசையில் விழுந்துவிடாதீர்கள். இன்றிரவு அதை நீங்கள் சரிபடுத்திக் கொள்ள முடியும். நித்தியம் என்று ஒன்றுண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது துவங்கவும் இல்லை, முடியப் போவதும் இல்லை. நீங்கள் அதன் ஒரு பாகமாகலாம். ஒன்று நீங்கள் அவதியுறலாம், அல்லது நீங்கள் சந்தோஷமாக வாழலாம். நீங்கள் பரம வீடு செல்லும் வரைக்கும் உயிர் வாழ்வீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? “நான் மிகவும் இளமையாக இருக்கிறேன்'' என்று நீங்கள் கூறலாம். சற்று முன்பு எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. என் பகுதியில் வாழும் இளம் பெண் ஒருத்தி தவறான பாதைக்கு திரும்பி, புகை பிடிக்கத் தொடங்கினாள். எத்தனையோ முறை அவளுக்கு புத்தி சொல்லியும் அவள் கேட்கவில்லை. அவளுக்கு பதினாறு வயது, இல்லை பதினெட்டு வயது. மேல்நிலைப் பள்ளிப்படிப்பு மாத்திரமே முடித்தவள். அவள் சரியாக நடந்து கொள்ள வேண்டுமென்று கூறப்பட்டு, அவள் சரியான வழியில் நடந்து கொண்டிருந்தாள். ஆனால் அவள், இந்த பிள்ளைகள் செய்வது போல், தவறான கூட்டத்துடன் சேர்ந்து கொண்டாள். 75அண்மையில் ஷரீவ்போர்ட்டிலுள்ள கறுப்பு நிறமுள்ள ஒரு மனிதன் எழுந்து நின்று, ''தேவன் என்று ஒன்றும் கிடையாது'' என்று கூறினார். அவர் தேவதூஷணம் உரைத்து, இவர்கள் உருளும் பரிசுத்தர் கூட்டமேயன்றி வேறொன்றுமல்ல'' என்றார் அவரை மின்னல் தாக்கிக் கொன்று போட்டது. அவருடைய உடலை கல்லறைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் சவ அடக்கம் செய்து கொண்டிருக்கும் வேளையில், ஒரு சிறு மேகம் தோன்றி, மின்னல் சவப்பெட்டியைத் தாக்கி, அதிலுள்ள அவருடைய உடலை எரித்துப்போட்டது. யேகோவா தேவன் கோபம் கொள்கிறார். அவர் நல்ல தேவன் என்று நானறிவேன். ஆனால் அவர் நியாயத்தீர்ப்பு செய்யும் தேவனும் கூட. அவர் இப்பொழுதும் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குத் தெரியும். நீங்கள் தேவனற்றவர்களாக இருந்தால், உங்கள் கையையுயர்த்தி, ''சகோ. பிரன்ஹாமே, நீங்கள் ஜெபம் செய்யும் போது என்னை நினைவு கூருங்கள்“ என்று சொல்லுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, ஸ்திரீயே. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, மகனே. அப்படித்தான், முன் வாருங்கள் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அப்படித்தான், வாலிபனே. பின்னால் உள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. நாம் ஜெபிக்கும் போது, நீங்கள் சர்வ வல்லமையுள்ள தேவனைக் கேளுங்கள். 76எங்கள் பரலோகப் பிதாவே, இவர்களை இப்பொழுது நீர் கண்டீர். உம்மை இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்பி, இருபது அல்லது முப்பது கரங்கள் உயர்த்தப்பட்டனவென்று நீர் அறிவீர். தேவனே, இப்பொழுது இதை அருள்வீராக. இந்த வார்த்தையை இவர்களுக்கு நான் அளித்தேன். நீரே, “என் வசனத்தைக் கேட்கிறவனுக்கு'' என்று கூறியிருக்கிறீர். ஆண்டவரே, என்னால் இயன்ற மட்டும் அந்த வார்த்தையை அவர்களுக்கு அளித்தேன். ''என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்'', அதை யோசித்து பார்க்கும் போது, அது எவ்வளவு அற்புதமான காரியம் உயர்த்தப்பட்ட கரங்களுக்குப் பின்னால் உள்ள உத்தமமான இருதயங்களை அதை உண்மையாகவே செய்திருந்தால், இப்பொழுது ஒன்று நிச்சயமாக சம்பவித்துவிட்டது. ”மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் அறிக்கை பண்ணுவேன்'' என்று நீர் சொல்லியிருக்கிறீர். ஆண்டவரே, நீர் இங்கிருக்கிறீர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக. அதை அருள வேண்டுமாறு ஜெபிக்கிறேன். எங்களுக்கு செவிகொடும். கர்த்தாவே, நாங்கள் உமது ஊழியக்காரர்கள். இயேசுவின் நாமத்தில். 77சரி, உங்கள் தலையை தூக்குங்கள். அவர் யேகோவா - யீரே என்று விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் ஆசி) லோத்தின் நாட்களில் இருந்தது போன்ற நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று விசுவாசிக்கிறீர்களா? (“ஆமென்'') நோவாவின் நாட்கள்? (”ஆமென்“) கடைசி செய்தியை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு முதன் முறையாக வந்திருப்பவர் யாராகிலும் உண்டா? உங்கள் கையையுயர்த்துங்கள். பலர் சகோ. பார்டர்ஸ் உங்களுக்கு விளக்கித் தந்திருப்பாரென்று நினைக்கிறேன். என்னைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், என்ன நடக்கிறதென்று. அப்படியானால், உங்கள் கைகளையுயர்த்துங்கள்- நீங்கள் அதை முன்பு கண்டிராமல் அதை குறித்து கேள்விப்பட்டிருக்க மாத்திரம் செய்திருந்தால். நான் இங்குள்ள ஜனங்களுக்கு அந்நியன். 78உங்களில் சிலர் வியாதிப்பட்டிருக்கலாம். நீங்கள் தேவனிடம் ஜெபத்தை ஏறெடுத்து ''தேவனே, என் மேல் கிருபையாயிரும், நான் வியாதியாயிருக்கிறேன். சகோ. பிரன்ஹாமுக்கு என்னைத் தெரியாது. ஆனால் நீர் எங்கள் பலவீனங்களைக் குறித்து தொடப்படக் கூடிய பிரதான ஆசாரியர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்“ என்று சொல்லுங்கள். எத்தனை பேருக்கு அது தெரியும்? (சபையோர் ”ஆமென்“ என்கின்றனர் - ஆசி). ”அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அது உங்களுக்குத் தெரியுமா? (“ஆமென்” ), அவர் அதே பிரதான ஆசாரியராக மாறாதவராயிருப்பாரானால், நீங்கள் அவரைத் தொடும் போது, அவர் எப்படி நடந்துகொள்வார்? பெரும்பாடுள்ள ஸ்திரீ அவரைத் தொட்ட போது அவர் நடந்து கொண்ட விதமாகவே அவர் திரும்பிப் பார்த்து, அவளுக்கு பெரும்பாடு உள்ளதென்றும், அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்ததென்றும் கூறினார். அது சரியா? இன்றிரவும் அவர் மாறாதவராக உள்ளார். நீங்கள் மாத்திரம் அவரை விசுவாசித்தால், அன்றிருந்தது போலவே அவர் இன்றும் இருப்பார். அவ்வாறு நீங்கள் அவரை விசுவாசிக்கின்றீர்களா? நீங்கள் இந்தப் பக்கம் என்னை நோக்கிப் பாருங்கள். அலங்கார வாசலண்டையில் பேதுருவும் யோவானும், ''எங்களை நோக்கிப் பார்'' என்று கூறினது போல. அவர்களை எதற்காவது நோக்கிப் பார்க்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஆனால் “அவர்கள் என்ன கூறுகின்றனர் என்பதை பார்க்கவேண்டும்'' என்பதே. 79நாம் இங்கு எங்காகிலுமிருந்து தொடங்குவோம். இந்த பக்கம் பார்த்து, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். ''கர்த்தராகிய இயேசுவே, உம்மை நான் விசுவாசிக்கிறேன். உமது வஸ்திரத்தைத் தொட நான் விரும்புகிறேன். நீர் சகோ. பிரன்ஹாமிடம் பேசி எனக்குள்ள கோளாறு என்னவென்று அவருக்குத் தெரியப்படுத்தும். அப்படி தெரியப்படுத்தும். அப்படி நீர் செய்வீரானால் உம்மை நான் விசுவாசிப்பேன்“ என்று கூறுங்கள். நீங்கள் அப்படிசெய்வீர்களா? இதை வலியுறுத்துகிறேன். அப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்ய நான் துணிச்சல் கொள்வேனா? அப்படிப்பட்ட ஒரு சவால் விடுவதற்கு என்னிடம் ஏதோ தவறு இருக்கவேண்டும். இந்த சவாலை நான் ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் முன்னிலையில் விடுத்திருக்கிறேன். அவர்களுடைய மொழியும் கூட எனக்குத் தெரியாது. ஆனால் அவர் என்னைக் கைவிட்டதேயில்லை. ஏன்? அவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். இது கடைசி நாட்கள். இக்காலத்தில் அவர் இதை வாக்களித்துள்ளார். எனவே அது இங்குள்ளது. 80நண்பர்களே, உங்களைப் புண்படுத்த உங்களுக்கு அநேக காரியங்கள் உண்டாயிருந்தன என்று அறிவேன். உங்களுக்கு நிறைய மாம்சப் பிரகாரமான போலிகள் இருந்தன. ஆனால் ஒன்றை உங்களிடம் கூறட்டும் - என் நன்மைக்காக அல்ல. உங்கள் நன்மைக்காகவே. அவர்கள் எக்காலத்தும் அதை பெற்றிருந்தனர். தேவன் ஒரே நேரத்தில் இரண்டு பேர்களை இவ்வுலகில் வைத்ததே கிடையாது. ஆனால் இதை ஞாபகம் கொள்ளுங்கள். நிறைய போலிகள் உள்ளன, ஆனால் ஒரு உண்மையான தேவன் இருக்கிறார். ஒரு உண்மையான பரிசுத்த ஆவி உண்டு. ஒரு உண்மையான செய்தி உண்டு. அது இயேசு கிறிஸ்து பாவிகளுக்காக மரித்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, பரிசுத்த ஆவி என்னும் நபராக திரும்பவும் வந்து, இவ்வுலகில் அவர் இருந்த போது செய்த அதே கிரியைகளை இப்பொழுது சபையில் செய்து கொண்டிருக்கிறார் என்பதே. 81தேவனுடைய வார்த்தை இவ்வாறு உரைக்கவில்லையா? வேதாகமம் எபிரெயர்: 4ம் அதிகாரத்தில், ''தேவனுடைய வார்த்தையானது இருபுறம் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவாக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது,'' என்றுரைக்கிறது. அது சரியா? ஆகையால் தான் இயேசு கூட்டத்திலுள்ளவர்களின் முன்னால் நின்றுகொண்டு அவர்களுடைய இருதயங்களிலுள்ள இரகசியங்களை அவர்களிடம் கூற முடிந்தது. அதைக் கண்ட பரிசேயர் அவரை 'பெயல்செபூல்' என்றழைத்தனர். இயேசு திரும்பிப் பார்த்தார். அவர்கள் அதை உரத்த சத்தமாய் கூறவில்லை. ஆனால் பெரும்பாடுள்ள ஸ்திரீயிடம் அவளுடைய நிலைமையை அவர் எடுத்துரைத்தது போலவும், கிணற்றண்டையில் இருந்த சமாரிய ஸ்திரீயிடம், அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்களென்று அவர் கூறினது போலவும், பரிசேயர் தங்கள் இருதயங்களில் நினைத்திருந்ததை அவர் பகுத்தறிந்தார். சமாரிய ஸ்திரீ, ''அது மேசியாவின் அடையாளம்“ என்று அறிந்து கொண்டாள். இப்பொழுது நீங்கள் மேசியா திரும்பவும் வந்து தமது ஜனங்களின் மத்தியில் பிரசன்னமாயிருப்பதைக் காண்கிறீர்கள்; அது பரிசுத்த ஆவி சபையை ஆயத்தப்படுத்திக் கொண்டிருத்தலாம். 82இப்பொழுது உங்கள் தலையை திருப்புங்கள். அந்த ஸ்திரீ முதுகை சற்று உயர்த்தினவாறு உட்கார்ந்து கொண்டிருப்பதை காண்கிறீர்களா? அந்த ஒளி அவள் மேல் உள்ளதை காண முடிகிறதா? அவள் உயர்ந்த இரத்த அழுத்தத்தால் அவதியுறுகிறாள். அது உண்மை. அவள் ஊதா நிறமுள்ள உடை உடுத்தியிருக்கிறாள். மூக்கு கண்ணாடி அணிந்திருக்கிறாள். கடந்த ஓரிரண்டு வினாடிகளாக, அவள் தன்னைச் சுற்றிலும் ஒரு விசித்திரமான உணர்வு உள்ளதை உணருகிறாள். அது உண்மை. உன்னை மிகவும் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த இரத்த அழுத்தம் உன்னை விட்டுப் போய்விட்டது. அதை ஏற்றுக்கொள்கிறாயா? அப்படியானால் உன் கையையுயர்த்து. அவள் எதை தொட்டாள்? பிரதான ஆசாரியனை. நீங்கள் சென்று அந்த ஸ்திரீயைக் கேட்டுப் பாருங்கள். அவளை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. அந்த ஸ்திரீயைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது; அது உண்மை. அந்த ஒளி கூட்டத்தினரிடையே நகர்ந்து சென்று கொண்டிருந்தபோது அதை கவனித்துக் கொண்டிருந்தேன். அது நேராக அவள் மேல் சென்று தங்கி, திரும்பி வந்தது. அது ஜொலிக்கும் ஒளி. 83நீ விசுவாசிக்கிறாயா? மூட்டு வீக்கம், மூத்திரைப் பை கோளாறு, நரம்புத் தளர்ச்சி, பலவீனம், சிக்கல்கள். அது உண்மை. நீ இந்த இடத்தை சேர்ந்தவளல்ல, நீ வெஸ்ட் பாய்ண்ட் என்னுமிடத்திலிருந்து வருகிறாய். அது உண்மை. நீ யாரென்று தேவன் என்னிடம் கூற முடியுமென்று விசுவாசிக்கிறாயா? திருமதி ஹார்ட்விக். அது உண்மை. அது உண்மையானால் எழுந்து நில். உன் வியாதி உன்னை விட்டு போய் விட்டது. இயேசுகிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் “ஆம்” என்கின்றனர் - ஆசி). ஜனங்கள் உன்னைப் பார்க்க பின்னால் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஸ்திரீ இங்கேயிருக்கிறாள். பாருங்கள், அந்த ஒளி இன்னும் அவள் மேல் தங்கியுள்ளது. உங்களால் அதைக் காணமுடியவில்லையா இதோ அது. கவனியுங்கள். அங்கு உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனின் மேல் அது சென்றுவிட்டது. மூட்டு வீக்கம். அவர் தன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறார். தேவன் உங்களை சுகமாக்குவார், ஐயா, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர், ஆனால் தேவனுக்கல்ல. 84அங்கு பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்திரீ தலைவலியால் அவதிப்படுகிறாள், தேவனே, அவள் அதை இழந்து போக வேண்டாம். ஓ, தேவனே, தயவு கூர்ந்து. திருமதி மார்டன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அவர் தலைவலியிலிருந்து உன்னை சுகமாக்கினார். பாருங்கள், அவளிடமிருந்து அந்த ஒளி கடந்து போக அவர் விடவில்லை. உன்னை ஒன்றும் கேட்க விரும்புகிறேன். நேற்றிரவு இக்கட்டிடத்திலுள்ள ஒருவரிடம் அவருடைய தலைவலியைக் குறித்து நான் கூறினபோது, உனக்கு ஒரு வினோத உணர்ச்சி உண்டானது. அது ஒருக்கால் நீயாயிருக்குமா என்று நீ வியந்தாய். அது சரியா? உன் கையையுயர்த்து. நான் மனோதத்துவத்தினால் உன் மனதிலுள்ளவைகளை படிக்கவில்லை. நீ என்ன நினைத்துக் கொண்டிருந்தாய் என்று நான் உன்னிடம் கூறுகிறேன். அதை ஏற்றுக் கொள். அது இன்று நீயாயிருக்க வேண்டுமென்று அவர் உறுதி கொள்ள விரும்பினார். அந்த ஒளி உன்னை விட்டு இப்பொழுது சென்றுவிடும். உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. அல்லேலுயா. 85கட்டம் போட்ட உடை உடுத்தி இங்கு உட்கார்ந்து கொண்டுள்ள அந்த ஸ்திரீயைப் பாருங்கள். ஸ்திரீயே, உன்னிடம் ஜெப அட்டை உள்ளதா? உன்னிடமுள்ளதை பரிசோதித்துப்பார். அந்த பிளவு (rupture) உன்னை விட்டு நீங்குமென்றும் நீ சுகமாவாய் என்றும் நீ விசுவாசிக்கிறாயா? அதுதான் கோளாறு என்றால் உன் கையையுயர்த்து. சரி. உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்து சுகமடைவாயாக. உன் தேவை என்னவென்று பார்த்தாயா? கையையுயர்த்திய ஸ்திரீக்குப் பின்னால் இருக்கும் ஸ்திரீ... இவள் அல்ல, இரண்டாம் வரிசையில் உள்ளவள் பச்சை உடுப்பு உடுத்தியிருப்பவள்; அவளுக்கு இருதய நோய் உள்ளது. ஆம், தேவன் உன்னை சுகமாக்குவாரென்று விசுவாசிக்கிறாயா, அது அருமையானது, அழகானது, அது நீ விசுவாசித்தால். அவர் உன்னைச் சுகமாக்குவார். ஸ்திரீ, உனக்கு இரண்டவதாக அமர்ந்திருப்பவள் அங்குள்ள திருமதி. டில்மன். உன் வயிற்று கோளாறை தேவன் சுகமாக்குவாரென்று நீ விசுவாசிப்பாயானால் திருமதி. டில்மன், விசுவாசி. அப்பொழுது உன் வயிறு சுகமடையும். அது நரம்புடன் சம்பந்தப்பட்ட வயிற்றுக் கோளாறு. அது நீண்ட நாட்களாக உள்ளது. ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு உனக்கு நின்ற முதற்கு அது உன்னை பீடித்துள்ளது. உன்னை தொல்லைப்படுத்த அநேக காரியங்கள் உனக்கிருந்தன, ஆனால் அவையெல்லாம் இப்பொழுது முடிந்துவிட்டன. இவையாவும் உண்மையானால், ஜனங்கள் காணும் படியாக உன் கையை ஆட்டு. நான் உனக்கு அந்நியனானால் உன் கையை ஆட்டிக் கொண்டேயிரு. இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். 86நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). அது என்ன? யேகோவா - யீரே, தேவன் தமக்காக ஒரு பலியை அருளுதல். இப்பொழுது கூட்டத்திலுள்ள அனைவருமே எனக்கு மங்கலாக காணப்படுகின்றனர். யேகோவா - யீரே உங்கள் ஒவ்வொருவருக்காகவும் பலியை அருளியிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?. இங்கு கைகளையுயர்த்தினவர்கள், இங்கு வந்து ஒரு நிமிடம் நில்லுங்கள். அப்படி செய்வீர்களா? யேகோவா - யீரே ஒரு பலியை அருளியிருக்கிறார். அதை விசுவாசித்ததன் அறிகுறியாக நீங்கள் கைகளையுயர்த்தினீர்கள். இங்கு நடந்ததை நீங்கள் கண்டு அதை அறிந்திருக்கிறீர்கள். கூடாத காரியம். அது முக்கியமான ஒன்று! அந்த ஜனங்களைப் பாருங்கள். எத்தனை பேர் பெயர் சொல்லி அழைக்கப்பட்டனர் என்று எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் ஒருக்கால் ஏழு, எட்டு அல்லது பத்து பேராயிருக்கலாம். அது தொடர்ந்து கொண்டே இருக்கமுடியும். எனக்கு பெலம் உள்ள பொழுதே, நீங்கள் வந்து கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். “நான் வருகிறேன் ஆண்டவரே, இப்பொழுது உம்மண்டை வருகிறேன்'' என்னும் பாடலை நாம் பாடும்போது, நீங்கள் எழுந்து வருவீர்களா சற்று முன்பு கையுயர்த்தினவர்கள் இப்பொழுது எழுந்து வருவீர்களா? நீங்கள் பீடத்தை சுற்றி நின்று, நீங்கள் கிறிஸ்துவைக் குறித்து வெட்கப்படவில்லை என்பதை காண்பியுங்கள். நீங்கள் அவருடைய சமுகத்தில் இருக்கிறீர்கள். இப்பொழுது வந்து, நீங்கள் உண்மையாகவே அப்படி செய்தீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் தேவனால் நினைவு கூரப்பட விரும்புகிறீர்கள் என்றும், நீங்கள் அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டீர்கள் என்றும் காண்பியுங்கள். நாம் எழுந்து பாடும் போது, முன்னே வாருங்கள். நான் வருகிறேன், ஆண்டவரே இப்பொழுது உம்மண்டை வருகிறேன்! கல்வாரியில் பாய்ந்த இரத்தத்தால் என்னைக் கழுவி சுத்தமாக்கியருளும்! இப்பொழுது வாருங்கள், இங்கே வந்து நில்லுங்கள், நாங்கள் இப்பொழுது ஜெபிக்கப் போகின்றோம். நீங்கள் இவ்விடம் விட்டுச் செல்லும்போது, இதைக் காட்டிலும் அவருக்கு அருகாமையில் இருக்க முடியாது. இப்பொழுது உம்மண்டை வருகிறேன் என்னைக் கழுவி சுத்தமாக்கியருளும்! 87மாடியின் முன்பக்கத்திலிருந்து கீழே இறங்கி வாருங்கள்: ஆம், கீழே இறங்கி வந்து இங்கே நில்லுங்கள். அவர்... “மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் என் பிதாவுக்கு முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்” என்று அவர் கூறியுள்ளார். ஆனால் நீங்கள் என்னைக் குறித்து வெட்கப்பட்டால், நானும் உங்களைக் குறித்து வெட்கப்படுவேன்.'' ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் முடியவுள்ள வேதாகமத்தை நினைவு கூருங்கள். வாலிபரே, வயோதிபரே, இப்பொழுது வாருங்கள். நீங்கள் வருவீர்களா? சபை அங்கத்தினரானாலும், இல்லாவிட்டாலும், இப்பொழுது வாருங்கள். வருவீர்களா? கிறிஸ்துவின் சமுகத்தில் நீங்கள் உள்ளபோது, அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் வருகிறேன், ஆண்டவரே இப்பொழுது உம்மண்டை வருகிறேன்! கல்வாரியில் பாய்ந்த இரத்தத்தால் என்னைக் கழுவி சுத்தமாக்கியருளும்! இதை நாம் மறுபடியும் பாடுவோம் (சகோ. பிரன்ஹாம் “நான் வருகிறேன், ஆண்டவரே'' என்னும் பாடலை மெளனமாக இசைக்கிறார் - ஆசி). 88கவனியுங்கள், நான் அவருடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இதை நான் இதற்கு முன்பு அறிக்கை செய்யவில்லை. ஆனால் அதை கூறுவதன் மூலம், நான் எதை கூற விழைகிறேன் என்பதை ஜனங்கள் அறிந்து, புரிந்து கொள்வார்களென்று நம்புகிறேன். கிறிஸ்துவ மார்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் மக்கள் இங்கு இருக்க வேண்டும். நீங்கள் வரமாட்டீர்களா? உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்படி? நீங்கள் வேறொரு அடையாளத்தை பெறப்போவதில்லை. அது கர்த்தர் உரைக்கிறதாவது. அது உண்மையாயிராமல் போனால், தேவனுடைய தீர்க்கதரிசி அப்படிப்பட்ட ஒரு வாக்கு மூலத்தை அளிப்பாரா? கிறிஸ்துவின் வருகைக்கு முன்னதாக நீங்கள் உங்கள் மிகப்பெரிய அடையாளத்தையும், கடைசி அடையாளத்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். வாருங்கள் இவைகளை நான் கூறும் காரணம் என்னவெனில் - இதை நான் வேறெந்த கூட்டத்திலும் கூறினதில்லை - இங்கு ஏதோ ஒன்று நிகழ்வதற்கு தருணம் உள்ளது என்று உணருகிறேன். அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறேன். நீங்கள் புரிந்து கொள்வீர்களென்று நம்புகிறேன். நீங்கள் சென்று ஒரு விதமான கொள்கையை (cult) உண்டாக்கிக் கொண்டு, “சகோ. பிரன்ஹாம் தேவன் என்றோ, அல்லது அப்படிப்பட்ட ஏதாவதொன்றையோ கூற வேண்டாம்”. நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது வாருங்கள். வாருங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை நான் தூண்டுகிறேன். வாருங்கள்! 89நீங்கள் எந்நிலையில் இருக்கின்றீர்கள் என்று நிச்சயமாக அறிந்திராதவர்கள், அறிவாளியாக மாத்திரம் அல்லது ஒரு விதமாக உணர்ச்சி வசப்பட்டுள்ளவர்கள்; நீங்கள் அழுது, கதறியழுது, அல்லது அத்தகைய உணர்ச்சி ஏதாவதொன்றை பெற்றிருந்திருக்க வகையுண்டு. அதை ஆதாரமாகக் கொண்டு உள்ளே வர முயல வேண்டாம். கர்த்தருடைய நாமத்தில் உங்களுக்கு உரைக்கிறேன். நீங்கள் இழக்கப்படுவீர்கள், பயங்கரமாக இழக்கப்பட்டு அதை அறியாதிருப்பீர்கள். நண்பனே, தருணத்தை இழக்க வேண்டாம். நான் விதைக்க மாத்திரம் செய்கிறேன், வலையை இழுக்கிறேன். விளையச் செய்கிறவர் தேவனே. எனக்குத் தெரியாது. நாம் தலைவணங்குவோம், அவருக்கு வேறு யாராகிலும் உள்ளனரா என்று பார்ப்போம் (ஒரு சகோதரி அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைக்கிறாள் - ஆசி). அதைக் கேட்டீர்களா? இப்பொழுது உம்மண்டை வருகிறேன் (உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள்) கழுவி என்னை சுத்தமாக்கியருளும் 90சபை அங்கத்தினனே, எனக்கு சபையை சேர்ந்துள்ள அனுபவம் மாத்திரம் இருந்து, இங்கு நின்று கொண்டிருந்தால், நான் உடனடியாக இங்கு வந்து நிற்பேன். ஞாபகம் கொள்ளுங்கள், நாம் முடிவுக்கு வந்துள்ளோம் என்று ஆவியானவர் சாட்சி பகருகின்றார். விஞ்ஞானமும் ''நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் உள்ளன'' என்று கூறிவிட்டது. செய்தியும் வேதாகமும், “இதோ அது இங்குள்ளது. இதுவே கடைசி காரியம் என்கின்றன. எழுப்புதல் முடிவடைந்து கொண்டிருக்கிறது, கதவு அடைபடுகின்றது. நீங்கள் வெளியே இருந்து தட்டிக் கொண்டிருப்பீர்கள். உங்களால் உள்ளே வர முடியாது. வாருங்கள்! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, வாலிபப் பெண்ணே. நான் வருகிறேன், ஆண்டவரே! இப்பொழுது உம்மண்டை வருகிறேன். தேவன் உங்களைஆசீர்வதிப்பாராக. அது உண்மை ஐயா. அப்படித்தான். மாடியின் முன் பக்கத்திலிருந்து கீழே இறங்கி வாருங்கள். வரிசை வரிசையாக வருகின்றனர். 91இங்கு வார்த்தை உள்ளது, இங்கு அத்தாட்சி உள்ளது. அங்கு ஆவி உள்ளது, அங்கு சாட்சி உள்ளது. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்பதைக் காண்பிக்க இங்கு ஜனங்கள் வந்து கொண்டிருக்கின்றனர். நான் வருகிறேன், ஆண்டவரே! இப்பொழுது உம்மண்டை வருகிறேன் கல்வாரியில் பாய்ந்த இரத்தத்தால் என்னைக் கழுவி சுத்தமாக்கியருளும்! நான் வருகிறேன் ஆண்டவரே! ஆவியானவர் அழைப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். கையுயர்த்தின யாவரும்... வாருங்கள்... வாருங்கள்... ஒருக்கால் உங்கள் மனதில் சந்தேகம் இருக்கக் கூடும். நண்பர்களே, நீங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்கவேண்டும். பரிபூரண விசுவாசம். கல்வாரியில் பாய்ந்த... நான் வருகிறேன்... இப்பொழுது உம்மண்டை... வாருங்கள். சுமார் அறுபதிலிருந்து எழுபது பேர் சுற்றிலும் நின்று கொண்டிருக்கின்றனர். இப்பொழுது வாருங்கள். வரவேண்டியவர்கள் வாருங்கள். இன்னும் சிறிது நேரம் தாமதிக்கிறேன். ஏனெனில் நாளை தெய்வீக சுகமளிக்கும் ஆராதனை. சற்று முன்பு பரிசுத்த ஆவி என்னிடம், “ஜெப வரிசையை அழைக்காதே, பீட அழைப்பு கொடு'' என்றார். அவருக்கு நான் கீழ்ப்படிந்து அவர் கட்டளையிட்டபடியே செய்கிறேன். அதை என்னால் செய்யாமலிருக்க முடியாது. இப்பொழுது உம்மண்டை வருகிறேன் கல்வாரியில் பாய்ந்த இரத்தத்தால் என்னைக் கழுவி சுத்தமாக்கியருளும் 92நமது தலைகள் இப்பொழுது வணங்கி, நாம் காத்திருக்கும் இந்நேரத்தில், ஓ தேவனே, பரிசுத்த ஆவியானவர், பீடத்துக்கு முன்னால் வர விரும்பும் இவர்கள் மேல் அசைவாடி, இவர்களை ஆசீர்வாதத்துக்குள் வழி நடத்துவாராக. கர்த்தராகிய தேவனின் நாமத்தில் இதை அருள்வீராக, தேவனுடைய ஆவியே, அசைவாடும். நெருங்கி வாருங்கள், நெருங்கி வாருங்கள். அருகாமையில் வாருங்கள், ஒவ்வொருவரும். “பாவத்தினால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் கர்த்தரிடத்தில் கிருபையுண்டு.'' இப்பொழுது வாருங்கள். ”கழுவும் இரத்த வெள்ளத்தின் கீழ் வந்து, அவர்களுடைய குற்றமுள்ள கறைகள் அனைத்தும் போக்கிக் கொள்கின்றனர். இம்மானுவேலின் இரத்தக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிறைந்த ஊற்று ஒன்றுண்டு'' பயபக்தியாக. 93கூட்டத்தின் மேலுள்ள சமாதானத்தை இப்பொழுது உணருகிறீர்களா? அது என்ன? அது பாவிகளுக்கு மரணம். தனிப்பட்ட ஊழியக்காரர்கள் இவர்களோடு கூட செல்லுங்கள். அது மரணம். இந்த ஜனங்கள் மரித்துக் கொண்டிருக்கின்றனர். வேதாகமங்கள் வெளியே எடுக்கப்பட்டு, அவர்கள் விவரிக்கின்றனர். பீடத்தைச் சுற்றிலும் மரணம் சென்று கொண்டிருக்கிறது. மரணத்துக்குப் பிறகு புது ஜீவன் வரும். இம்மானுவேலின் இரத்தக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தினால் நிறைந்த... (ஓ, அதை ஒரு நாளில் கேட்க நீ எவ்வளவாக விரும்புவாய், உன் இருதயத் துடிப்பு நிற்கும் அந்த நாளில்). அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கும் பாவிகள் தங்கள் பாவக் கறைகள் அனைத்தும் போக்கிக் கொள்கின்றனர் தங்கள் பாவக் கறைகள் அனைத்தும் போக்கிக்கொள்கின்றனர் (அப்படித்தான் வாலிபனே, உன் இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக. அப்படித்தான், அதற்காகத்தான் அவர் காத்துக் கொண்டிருந்தார்.) அந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கும் பாவிகள் தங்கள் பாவக் கறைகள் அனைத்தும் போக்கிக் கொள்கின்றனர். 94போதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், நாம் அடுத்த சரணத்தைப் பாடும் போது முன்னால் வரட்டும். “மரித்துக் கொண்டிருந்த கள்ளன் அந்த ஊற்றை அவன் நாளில் கண்டு களிகூர்ந்தான். அங்கு, நான் அவனைப் போல் கொடியவனாயிருந்த போதிலும், என் பாவங்கள் அனைத்தும் கழுவிக் கொள்வேனாக.'' போதித்துக் கொண்டிருக்கும் ஜனங்கள் அருகாமையில் வரட்டும். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றிராதவர் முன்னால் வாருங்கள். ஒரு நிமிடத்தில் தேவன் என்ன செய்யப்போகிறாரென்று நீங்கள் அறிய மாட்டீர்கள். அடுத்த சரணத்தை இப்பொழுது நாம் பாடும் போது முன்னால் வாருங்கள். மரித்துக் கொண்டிருந்த கள்ளன் அந்த ஊற்றை அவன் நாளில் கண்டு களிகூர்ந்தான்... (வார்த்தை வெளிப்பட்டதை) (ஓ, அது அருமையானது, முன்னால் இப்பொழுது வாருங்கள் தண்ணீர் கலக்கப்படும் இந்நேரத்தில் வாருங்கள்).... அவனைப் போல் கொடியவனாயிருந்த போதிலும் என் பாவங்கள் அனைத்தும் கழுவிக் கொள்வேனாக என் பாவங்கள் அனைத்தும் கழுவிக் கொள்வேனாக என் பாவங்கள் அனைத்தும் கழுவிக் கொள்வேனாக. அப்படித்தான். ஊழியக்காரரே. உள்ளே வாருங்கள்... இப்பொழுது தண்ணீர் கலக்கப்படுவதற்காக காத்திருங்கள். முன்னால் வாருங்கள். ...அவனைப் போல் கொடியவனாயிருந்த போதிலும் என் பாவங்கள் அனைத்தும் கழுவிக் கொள்வேனாக. 95ஜெபம் செய்ய விரும்புகிறவர்கள், இப்பொழுது அருகில் வந்து ஆயத்தமாயிருங்கள். தேவன் இதை அங்கீகரிக்கப் போகிறாரென்று நாம் விசுவாசிக்கப் போகின்றோம். அவர் அப்படி செய்யத்தான் வேண்டும்! இருதயத்தின் சிந்தனைகளை பகுத்தறிய முடியும். அதே தேவன் இயேசு அந்த பட்டினத்தில் அதை ஒரு தரம் மாத்திரமே செய்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஆனால் அவர், ''இதைப் பார்க்கிலும் அதிகமாக நீங்கள் செய்வீர்கள்“ என்று கூறினார். பாருங்கள். அவருடைய வேதவாக்கியம் சரியென்று அவர் நிரூபித்தார் நெருங்கி வாருங்கள், பீடத்தண்டையில் வந்துள்ளவர்களுக்காக நாம் அனைவரும் ஜெபிப்போம். ஜெபம் செய்ய அறிந்துள்ள ஒவ்வொருவரும். மறுபடியும் பிறந்த எத்தனை பேர் இந்த கட்டிடத்தில் உள்ளனர்? உங்கள் கரங்களையுயர்த்துங்கள். இப்பொழுது நாமனைவரும் நமது கரங்களை உயர்த்தி இந்த ஜனங்களுக்காக நாம் நன்றி செலுத்துவோம். 96எங்கள் பரலோகப் பிதாவே, இந்த ஜனங்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இவர்கள் உம்முடையவர்கள். இவர்கள் வந்து தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின்றனர். தங்கள் சுயத்துக்கும் பாவத்துக்கும் மரிப்பதற்காக அவர்கள் வந்துள்ளனர். அவர்கள் கிறிஸ்துவில் புது சிருஷ்டிகளாக திரும்பிச் செல்வார்கள். சாத்தானே, போரில் தோற்றுவிட்டாய்! தேவன் யேகோவா - யீரோவாக இருக்கிறார். கர்த்தர் ஒரு பலியை அருளியிருக்கிறார், ஒரு கூட்டம் ஜனங்களை அருளியிருக்கிறார், பீட அழைப்பை அருளியிருக்கிறார். செய்தியை அருளியிருக்கிறார், கிருபையை அருளியிருக்கிறார். சாத்தான் போரில் தோற்று போனான், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவன் போரில் தோற்று போனான்!